சிட்டியின் மிரட்டலால் விஜயாவுக்கே ஆப்பு வைத்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து - சிறகடிக்க ஆசை

By subhashini · 16/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீல், விஜயாவை சந்தித்து பணம் தருகிறோம் என்றார். முதலில் மறுத்த விஜயா, 2 லட்சம் வேண்டும் என்று சொன்னதால் வக்கீல் ஒத்துக் கொண்டார். கேசை விஜயாவும் வாபஸ் வாங்கி விட்டார். இதை அறிந்த முத்து சந்தோஷத்தில் வீட்டில் உள்ள எல்லோரிடம் சொன்னார். ஆனால், விஜயா எப்படி வாபஸ் வாங்கினார் என்று சந்தேகத்தில் ரோகினி இருந்தார். இன்னொரு பக்கம் சிட்டி, பணத்தை கேட்டு மிரட்ட, எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்றார் ரோகினி. பின் மீனா அம்மா குடும்பத்தினர் விஜயாவிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

விஜயா வழக்கம்போல் மீனா குடும்பத்தை ரொம்ப அசிங்கப்படுத்தி இருந்தார். பின் முத்து, விஜயாவை வீட்டிற்கு அழைக்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் தன்னுடைய அப்பா விவாகரத்து செய்ய இருப்பதாக ஒரு பொய் சொன்னார். அதை நம்பி விஜயாவும் பயந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா வந்தது நினைத்து சந்தோஷப்பட்டார்கள். பின் கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் குறித்து எல்லோரும் கேட்க, வக்கீல் சொன்னது நியாயம் என்று பட்டது. அதனால் தான் வாங்கினேன்.

சிறகடிக்க ஆசை:

எனக்கு மீனா,அவருடைய குடும்பத்தின் மீது இருக்கும் கோபம் தீரவில்லை. மீனா இந்த வீட்ல இருக்கலாம். அவர் வீட்டிலிருந்து யாரும் இங்கே வரக்கூடாது என்று கேவலமாக பேசி விஜயா இருந்தார். அண்ணாமலை, முத்து எவ்ளோ பேசியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுநாள் காலையில் ரோகினி, விஜயா கேஸ் வாபஸ் வாங்கின விஷயத்தை பற்றி பார்வதி இடம் போட்டு வாங்கி இருந்தார். பார்வதியும் உளறி விட்டார். பின் விஜயா 2 லட்சம் வாங்கி இருந்த பணத்தை பார்வதி காண்பித்தவுடன் ரோகினி ரொம்ப சந்தோசப்பட்டார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மண்டபத்தில் டெக்கரேஷன் செய்யும் வேலை கிடைத்து இருக்கிறது. இதை பார்த்து ஸ்ருதி-முத்து இருவருமே பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சுருதி, நீங்கள் இதை சோசியல் மீடியாவில் போட்டால் நிறைய ஆர்டர் கிடைக்கும் என்று சொல்கிறார். மீனா தயங்கினாலும், முத்து ஒத்துக் கொள்கிறார். பின் மீனாவை அழகாக தயார் செய்து மாடலிங் போல் ஸ்ருதி நடிக்க வைக்கிறார்.

இன்றைய எபிசோட்:

மீனாவும் ஸ்ருதி சொன்னது போலவே செய்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு முத்துவுக்கு ஒரே சந்தோஷம். பின் மீனாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ரோகினிக்கு சிட்டி போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார். அப்போது சிட்டி, பணம் கொடுக்கவில்லை என்றால் பிஏ பிணத்தை வீட்டில் கொண்டுவந்து போடுவேன் என்று சொன்னவுடன் ரோகிணி ரொம்பவே பயந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் ரோகினி, பணத்தை பற்றி யோசித்து பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கு விஜயாவிற்கு பானிபூரி கொடுத்து ஐஸ் வைக்கிறார். பின் போனில் சிக்னல் இல்லை என்று சொல்லி பார்வதியின் ரூமிற்கு சென்று பணத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்து விடுகிறார் ரோகினி. இந்த விஷயம் பார்வதி-விஜயாவுக்கு எதுவுமே தெரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் ரவி - முத்து இருவருமே மீனா- சுருதி செய்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த மனோஜ், மீனா-முத்து நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full