பல திட்டங்களுக்குப் பிறகு முத்து போனில் இருந்த வீடியோவை எடுத்தாரா ரோகினி? சிறகடிக்க ஆசை

By subhashini · 29/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் தன்னுடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலர் ஆர்டரை வாங்குவது பற்றி வீட்டில் பேச, எல்லோரும் ஒத்து கொண்டார்கள். டீலர் ஓனர் வந்தவுடன் அவரை மனோஜ் வரவேற்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். பின் நல்லபடியாக கேக் வெட்டி தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கொண்டாடி இருந்தார்கள். அதற்குப்பின் தன்னுடைய ஆர்டரை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது.

பின் முத்துவை குடிக்க வைத்து மொபைலை எடுக்க வேண்டும் என்று ரோகினி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோருமே அவரை உஸ்பேத்த, வேறு வழி இல்லாமல் முத்து குடித்து விட்டார். பின் போதையில் முத்து, தாங்கள் பணக்கார குடும்பம் இல்லை என்று ஓனரிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். பின் அவர், முத்துவின் நேர்மையை பாராட்டி இந்த டீலங்கை மனோஜூக்கு கொடுத்தார். அதற்குப்பின் எல்லோருமே வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், வரும் வழியிலேயே முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார்.

சிறகடிக்க ஆசை:

மேலும், இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி அவர்களை வெளியிலேயே தூங்க சொன்னார். பெண்களை மட்டும் வீட்டிற்குள் வர சொன்னார். நேற்று எபிசோட்டில் மருமகள்கள் மூவருமே மன்னிப்பு கேட்டும் அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- மனோஜ்-ரவி மூவருமே மன்னிப்பு கேட்டு புலம்பி இருந்தார்கள். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் ரோகினி எப்படியாவது போனை எடுத்துவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் பார்த்து முத்து தண்ணீர் குடிக்க உள்ளே வர, இதை பார்த்த மீனா அவரை வெளியே கூட்டிட்டு போயி பேசி இருந்தார். முத்துவும் பார்ட்டியில் நடந்ததையும், மீனாவையும் புகழ்ந்து பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். மீனாவும் அவருடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ரோகினி, போனை எப்படி எடுப்பது என்று யோசித்து கொண்டு இருந்தார். பின் தன்னுடைய தோழிக்கு போன் செய்து நடந்ததை பற்றி சொல்லி புலம்பி இருந்தார் ரோகினி.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து - மனோஜ் - ரவி மூவருமே படிக்கட்டிலேயே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த அண்ணாமலை அவர்களை எழுப்ப சொல்கிறார்கள். மூன்று பேரையுமே அவர்கள் மனைவிமார்கள் எழுப்பி அழைத்து வருகிறார்கள். பின் அண்ணாமலை அறிவுரை சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் மனோஜின் கோட்டில் இருந்த போனை ரோகிணி பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முத்து- ரவி இருவருமே குளித்துவிட்டு டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த சப் டீலர்ஸ் மனோஜிற்கு மாலை அணிவித்து அவரை பாராட்டி புகழ்ந்து பேசுகிறார்கள். இதெல்லாம் கேட்டு மனோஜ் ரொம்பவே பெருமைப்பட, விஜயா-ரோகினி இருவருமே மனோஜை புகழ்ந்து பேசி சந்தோசப்படுகிறார்கள். வழக்கம்போல் முத்து, மனோஜை கிண்டல் பேசுகிறார். பின் வேலைக்கு கிளம்பும்போது போன் காணவில்லை என்று முத்து சொல்கிறார். மீனாவும் போனை தேடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full