ரோகினி விரித்த வலையில் சிக்கிய விஜயா, சீதாவுக்காக மீனா எடுக்க போகும் முடிவு என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி- ரவி இருவருமே புது ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் முத்து நிறைய குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதைப் பார்த்து மீனாவுக்கு கோபம் தான் அதிகமானது. அப்போது முத்து, நான் அருண் செய்த வேலை எல்லாம் சொல்லி புலம்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து சீதா, மீனாவிற்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது மீனா, அருண் செய்த வேலையை சொன்னார். மறு நாள் காலையில் முத்து காப்பாற்றிய அந்தப் பெண் தன்னுடைய கணவருடன் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது அவர்கள், உங்கள் மகனால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்றெல்லாம் முத்துவை புகழ்ந்து பேசினார்கள். அதற்குப்பின் முத்துவிற்கு தங்கச் செயினை பரிசாக கொடுத்திருந்தார்கள்.
இதை எல்லாம் சுருதி வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு விட்டார். இதை அருண், அவருடன் வேலை செய்யும் அதிகாரிகள் எல்லோருமே பார்த்து விட்டார்கள். பின் அருணுக்கு போன் செய்த உயர் அதிகாரி, நீ செய்தாய் என்று சொல்லி பாராட்டு வாங்கினாய். அந்த பெண்ணே முத்துவிற்கு பரிசு கொடுத்து இருந்தார். என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார். அருணால் எதுவுமே பேச முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
உயர் அதிகாரி, அருண் மோசடி செய்தது அறிந்து திட்டி விட்டார். அருணுக்கு போன் செய்த சீதா, எதற்காக இப்படி செய்தீர்கள்? இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் நம்ம காதலுக்கு உதவியாக இருந்திருக்கும். நீங்கள் என் மாமாவின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டீர்கள் என்று கேட்டார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. அருணின் அம்மாவுமே, நீ செய்தது தவறு தான். இனி சீதா உனக்கு கிடைக்க வாய்ப்பில்லை. நான் வேறு ஒரு பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் மீனாவை முத்து கோயிலுக்கு அழைத்துப் போனார். அங்கு தனக்கு கிடைத்த தங்க செயினை சீதாவிற்கு போட்டு அழகு பார்த்தார் முத்து.
கடந்த வாரம் எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகினி, நீங்கள் அத்தையை எப்படியாவது சாமியாரிடம் அழைத்து வந்து விடுங்கள். நானும் மனோஜூம் சேருவதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அதனால் பார்வதியுமே விஜயாவை சாமியாரை பார்க்க அழைத்தார். கடைசியில் சீதா, மீனா இருவருமே அருணை சந்தித்தார்கள். அப்போது அருண், இரண்டு வீட்டிலும் எங்களுடைய கல்யாணத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். நானும் சீதாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்கிறோம் என்றார். இதனால் மீனா ஷாக் ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், நாங்கள் திருமணம் செய்து கொள்வது நம் மூன்று பேர் தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம். பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு ஊரறிய நான் சீதாவை திருமணம் செய்து கொள்கிறேன். அவள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். அதற்கு மீனா, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். யோசித்து சொல்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் பார்வதி, விஜயா, மனோஜ் மூவருமே சாமியாரை பார்க்க போகிறார்கள். அங்கு சாமியார், நீ உன் மகனுக்கு கட்டிய கயிறை கழட்டி விடு. அந்த கயிறால் உனக்கு ஆபத்திருக்கிறது என்று சொல்கிறார். உடனே விஜயா, அந்த கயிரை கழட்டி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சாமியார், உன் மூத்த மருமகளால் தான் உன்னுடைய உயிர் காப்பாற்றப்படும். மகனையும் மருமகளையும் பிரித்து வைக்காதே என்று ஏதேதோ கதை அடித்து விடுகிறார். இதையெல்லாம் விஜயா நம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, சீதாவிற்காக ஒரு மாப்பிள்ளையை அழைத்து வருகிறார். ஆனால், அவர் டிரைவர் என்று தெரிந்தவுடன் மீனா வேண்டாம் என்கிறார். அதற்கு முத்து, சரி இந்த மாப்பிள்ளை வேண்டாம். ஆனால், அருணை மட்டும் நான் சீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். மீனாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பின் சாமியின் சம்மதத்தை கேட்கலாம் என்று சீட்டில் எழுதி போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.