இது தான் முதல்ல டைட்டிலுக்கு வச்ச பெயர் - சிறகடிக்க ஆசை சீரியல் Script Writer சொன்ன தகவல்

By subhashini · 24/3/2025

சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதையை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை.

இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் வாரம் வாரம் சன் டிவி சீரியலுக்கே போட்டியாக சிறகடிக்க ஆசை சீரியல் தான் இருக்கிறது.

சிறகடிக்க ஆசை குறித்த தகவல்:

மேலும், சீரியலில் ஹீரோ முத்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். சிறு வயதிலிருந்தே அம்மாவின் பாசத்திற்காக ஏங்கக் கூடியவர். ஆனால், விஜயாவுக்கு தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை தான் பிடிக்கும். முத்துவை எதிரி போலவே பார்ப்பார். முத்து கார் டிரைவராக இருக்கிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மீனாவின் அப்பா இறந்து விடுகிறார்.

சீரியல் கதை:

பின் அண்ணாமலை, மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார். மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது. அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயானவர் என்பது தெரியாது. இது தெரியாமல் இருப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை ரோகினி செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

மூன்றாவது மகன் ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல். தற்போது சீரியலில் பவானியில் கல்யாணத்தில் மலேசியா மணியின் உண்மை ரூபத்தை முத்து-மீனா கண்டுபிடித்து விடுகிறார்கள். பின் வீட்டில் இந்த உண்மையை முத்து சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. ரோகினிக்கு என்ன செய்வதென்று புரியாமலேயே தவிக்கிறார். அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பிலேயே சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சீரியல் குறித்த அப்டேட்:

இப்படி இருக்கும் நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் Script Writer குரு சம்பத்குமார் அளித்த பேட்டியில், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முதன்முதலில் சின்ன சின்ன ஆசை என்று தான் பெயர் வைத்தோம். பின் நடிகர்கள் தேர்வு என்று கொஞ்ச காலம் தள்ளிக்கொண்டே போனது. அப்படியே டைட்டிலும் சிறகடிக்க ஆசையாக மாறியது. மீனா கதாபாத்திரம் நிஜமான ஒருவரை வைத்து எடுக்கப்பட்டது. அதேபோல் ரோகினி கதாபாத்திரமும் அன்றாடம் வந்த ஒரு உண்மை செய்தியை வைத்து உருவானது. அவருக்கு ஒரு மகன் இருக்கும் விஷயம் இன்னொரு லீட் வைத்து விட்டு இந்த விஷயத்தை உடைப்போம் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full