கோலாகலமாக நடக்கும் சீதா-அருண் திருமண வேலைகள், ப்ரச்சனை செய்த மனோஜ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நான் பணம் கேட்கும் போது இல்லை என்றீர்கள். மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூணு பவுன் செயின் வாங்கித் தர இருக்கிறீர்கள். நீங்கள் நியாயமாகவே நடந்து கொள்ளவில்லை என்றார். அதற்கு சுருதி, நீங்கள் பணம் கேட்டது எமர்ஜென்சி கிடையாது. அத்தைக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மீனா என்னிடம் கேட்கவில்லை. சீதா என்னுடைய தோழி. அவளுக்காக நான் இதை செய்கிறேன் என்று சொன்னார். ரோகினிக்கு நோஸ்கட் கொடுக்கிற மாதிரி ஸ்ருதி பேசி இருந்தார். அதற்குப்பின் சிட்டி, மேனேஜரை விட்டு ரோகினிக்கு போன் பண்ண சொன்னார்.
அப்போது மேனேஜர், நான் முத்துவை பார்க்க தான் போகிறேன். ஓரு நாள் டைம் தருகிறேன். பணத்தை தரவில்லை என்றால் நான் முத்துவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் என்று மிரட்டி இருந்தார். இதை கேட்டு ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ரொம்பவே பதறி இருந்தார். அதற்கு பின் தூக்கத்தில் ரோகினி, வீட்டில் மேனேஜர் எல்லா உண்மையையும் சொன்னது போல் கனவு கண்டு கத்தினார். அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். விஜயா, ரோகினியை அவமானப்படுத்தி இருந்தார்
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சிட்டி, மேனேஜர் இருவருமே நன்றாக சரக்கு குடித்துவிட்டு ரோகினியிடம் பணத்தை வாங்குவதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், நீ பணத்தை ரெடி செய்யவில்லை என்றால் இப்பவே முத்துவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். உடனே ரோகினி, மீனா தங்கையின் திருமணத்திற்காக நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சொல்கிறேன். நீ நகையை வந்து எடுத்துக் கொள் என்றார். மறுநாள் ஸ்ருதி- மீனா இருவருமே நகைக்கடைக்கு சென்று நகை எல்லாம் வாங்கி வந்து சாமி ரூமில் வைத்து விட்டு திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க இருவரும் வெளியே கிளம்பி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இது தான் சந்தர்ப்பம் என்று ரோகினி, மேனேஜரை சந்தித்து நகையை எடுக்க வீட்டிற்கு வர சொன்னார்.
மேனேஜர் வீட்டில் யாரும் இல்லை என்று சாமி ரூமில் இருந்த நகைகளை எல்லாம் திருடி எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வருவதால் திருடனை பிடித்து வீட்டிற்குள் தள்ளி அடிக்க, அந்த திருடன் மனோஜின் முகத்தில் முகமூடியை போட்டுவிட்டு தப்பிக்க பார்த்தார். அந்த சமயம் பார்த்து மீனா- சுருதி இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள். திருடர்கள் ரெண்டு பேர் என நினைத்து ரெண்டு வெளுத்து வாங்கினார்கள். அதில் மேனேஜர் எப்படியோ தப்பித்து ஓடி விட்டார். மீனா, நகையை வாங்கி வைத்துக் கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் என்று தெரியாமல் சுருதி -மீனா இருவருமே பொளந்து கட்டுகிறார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த விஜயாவும் திருடன் என நினைத்து பயங்கரமாக அடிக்கிறார். மனோஜால் பேச கூட முடியவில்லை. அதற்கு பின் வீட்டிற்கு முத்து- அண்ணாமலை வருகிறார்கள். முத்து, மனோஜின் கையை முறுக்கி அடிக்கிறார். பின் மனோஜ் அலறல் சத்தத்தை கேட்டு தான் எல்லோருமே அடிப்பதை நிறுத்துகிறார்கள். அதற்கு பின் முகமூடியை திறந்து பார்த்து ஷாக் ஆகிறார்கள். நான் தான் அந்த திருடனை பார்த்தேன். அவன் என் முகத்தில் முகமூடியை போட்டு விட்டு சென்று விட்டான் என்று அழுகிறார். இன்னொரு பக்கம் மேனேஜர், சிட்டியிடம் அடி வாங்கியதை பற்றி சொல்லி புலம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், என்னை அடி வாங்க வைக்க பிளான் செய்தாயா? நான் முத்துவிடம் உண்மை சொல்ல போகிறேன் என்று மிரட்டுகிறார். இந்த முறை உஷாரான ரோகினி, நீ முத்துவிடம் சொல்லிக் கொள். எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை என்று சொல்கிறார். இதனால் மேனேஜரால் எதுவுமே பேச முடியவில்லை. சிட்டியுமே கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். அதற்குப்பின் சீதா- அருண் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் முத்து- மீனா பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் சாப்பாட்டில் வடை வைக்கவில்லை என்று ரகளை செய்து கொண்டிருக்கிறார். பெண் வீட்டாரே பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று மண்டபத்தில் இருப்பவர்கள் பேசி இருப்பதை கேட்ட முத்து, மனோஜிடம் பஞ்சாயத்து கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது