திருமணத்தை நிறுத்திய முத்து, வேதனையில் கதறும் சீதா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 9/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா திருமணத்தை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அருண் நண்பர், தன்னுடைய மனைவியிடம் இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம் என்று சொன்னார். இது புரியாமல் அவருடைய மனைவி மண்டபத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார். மண்டபத்தில் உள்ளவர்கள் எல்லோருமே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மண்டபம் முழுக்க இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்ற பேச்சு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. பின் இதைப்பற்றி மீனாவின் கேட்டார்கள். ஆனால், மீனா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து விட்டார்.

பின் இந்த விஷயம் முத்துவின் காதிற்கு சென்று விட்டது. கொந்தளித்த முத்து மணமேடையில் இருந்து அருணை கீழே இழுத்து வந்து சண்டை போட்டார். மீனாவின் அம்மா, சீதா, சத்யா எல்லோருமே குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது முத்து, இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம். இவனை வேண்டாம் என்று சொன்னேன். சீதா வாழ்க்கை அழிக்க பார்க்கிறான் என்றெல்லாம் கொந்தளித்தார். சீதா- மீனா இருவருமே உண்மையை பேச முடியாமல் தவித்தார்கள். ஒரு கட்டத்தில் அருண், ஆமாம் இது எனக்கு இரண்டாவது கல்யாணம் தான் என்று சொல்லி விட்டார். இதனால் பெண் வீட்டில் எல்லோருமே பேசி இருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அருண், எனக்கு இது ரெண்டாவது திருமணம் தான். சீதாவை தான் நான் முதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் ஆகிவிட்டது என்று சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. முத்துவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. எங்கள் வீட்டுப்பிள்ளையை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாயா? என்று அருணின் சட்டையை பிடிக்க போனார். உடனே அருண் நண்பர், அருணிற்கு நான் சாட்சி கையெழுத்து போட்டேன். சீதாவிற்கு அவருடைய அக்கா மீனாதான் கையெழுத்து போட்டார் என்று சொன்னார். இதை முத்துவால் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. கடைசியில் மீனாவுமே உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் முத்துவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி மீனாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

நேற்று எபிசோட்:

பின் விஜயா இது தான் சந்தர்ப்பம் என்று மீனா குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். அதிர்ச்சியில் மீனாவின் அம்மா, சீதா- மீனா இருவரையும் அடித்தார். அருண் அம்மா, இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள். திருமணத்தை நடத்தலாம் என்று சொல்வதற்கு சீதாவின் அம்மா எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா, தன் குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். அப்போது அவருடைய அம்மா, முத்து வந்தால் தான் இந்த திருமணம் நடக்கும் என்பதால் சீதா- மீனா இருவருமே முத்துவைத் தேடி போனார்கள். இன்னொரு பக்கம் அருண், என்ன நடக்குமோ? என்று புரியாமல் பயத்தில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, பாரில் பயங்கரமாக குடித்துவிட்டு மீனா செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒருவர், மீனா ஓடிப் போய்விட்டாளா? என்று மோசமாக பேசுகிறார். அதனால் கோபப்பட்ட முத்து, அவரிடம் சண்டை போடுகிறார். அந்த சமயம் பார்த்து மீனா- சீதா இருவருமே பாருக்கு வந்துவிடுகிறார்கள். முத்துவிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், முத்து கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் சீதா மண்டபத்தில் இல்லை என்று தெரிந்த அருண் அவருடைய அம்மாவிடம் சண்டை போடுகிறார். அதற்கு சீதாவின் அம்மா, முத்து இல்லாமல் இந்த திருமணம் நடக்காது என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே அருண், என்னிடம் சொல்லாமல் சீதா எப்படி போகலாம் என்று சீதாவிற்கு ஃபோன் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், சீதா ஃபோனை எடுக்கவில்லை. முத்து மனமும் மாறவில்லை. மண்டபம் முழுக்க கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்று எல்லோருமே தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லோரும் வந்து விடுகிறார்கள். இதனால் அருணுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மீனாவின் அம்மா, முத்து வரவைக்கும் திருமணம் நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full