மீண்டும் மனோஜிடம் வசமாக சிக்கிய ரோகினி, முத்துவுக்காக செல்வம் செய்த செயல்- சிறகடிக்க ஆசை

By subhashini · 17/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வம் குடித்துவிட்டு, தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று புலம்பி கொண்டு இருந்தார். இதை அறிந்த முத்து, மீனாவிடம் பணத்தை கேட்க, அவர் முடியாது என்று அறிவுரை சொன்னார். ஆனால், முத்து என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் இருந்தார். இன்னொரு பக்கம், ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டார்.

உடனே அவர் ஷாக் ஆகி முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. பின் வட்டிக்கு பணம் கொடுப்பதாக மனோஜ் சொன்னவுடன் ரோகிணி சந்தோசப்பட்டார். மறுநாள் கடையில் ரோகினி பணம் வாங்க வந்த போது ரோகினியின் தோழி ட்ராமா செய்து மீண்டும் மனோஜிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி விட்டார். பின் வெளியில் வந்த ரோகினி, 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவுக்கு கொடுத்து விடு என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதற்கு பின் முத்து, பணத்தை ரெடி பண்ணி செல்வத்திடம் கொடுக்க, அவர் வாங்க மறுத்தார். ஆரம்பத்தில் சொல்ல தயங்கிய செல்வம் இறுதியில் மீனா வந்து சென்ற விஷயத்தை முத்துவிடம் சொல்ல, முத்து கோபப்பட்டு மீனாவிடம் கேட்டார். இதனால் முத்து -மீனா இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. அப்போது பரிசு பணத்தை தான் பேங்கில் இருந்து எடுத்துக் கொடுத்ததாக முத்து சொன்னவுடன் மீனா கோபப்பட்டு கத்தி சண்டை போட்டார்.

சீரியல் கதை:

நேற்று எபிசோடில், கோபப்பட்டு முத்து அவரை அடிக்க கை ஒங்கியதால் மனம் உடைந்த மீனா அமைதியாகி விட்டார். மறுநாள் செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து, மீனா போனார்கள். செல்வம் வீட்டில் தடபுடலாக விசேஷம் நடந்தது. செல்வத்தின் வீட்டில் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள். இதை பார்த்த முத்து எதுவுமே பேசாமல் அமைதியாக சாப்பிடும் இடத்திற்கு சென்றார். அப்போது பிரியாணி சரி இல்லை என்று சண்டை நடந்தது. உடனே தன் நண்பனுக்காக முத்து சண்டைக்கு போனார். இதனால் செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகி இருந்தது.

இன்றைய எபிசோட்:

மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. இன்றைய எபிசோடில் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விடுகிறார்கள். இதை பார்த்து வருத்தப்பட்ட மீனா அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்கிறார். அப்போது மீனா, முத்துவிற்கு செல்வம் செய்த தப்பை பற்றி அறிவுரை சொல்கிறார். இருந்தும் முத்து கேட்கவில்லை. அதற்கு பின் வீட்டில் எதையும் சொல்லாமல் மீனா சமாளித்து விடுகிறார். கடையில் மனோஜ் வைத்த அடியால் பயங்கரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து ரோகினி- மனோஜ் இருவருமே எப்படி செலவு செய்வது என்று புலம்பியும் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பார்த்து பிளாக்மெயில் செய்ய மேனேஜர், ரோஹினிக்கு அவருடைய மகனின் போட்டோவை அனுப்பி, மிரட்டி பணத்தை கேட்கிறார். ரோகினிக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார். கடைசியில் செல்வம் தன்னுடைய மொய் பணத்தை மொத்தத்தையும் முத்துவிடம் கொடுத்து, நான் செய்தது தவறு. உனக்கு கஷ்டத்தை உருவாக்கி விட்டேன். மீதி பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று சொல்லி வருத்தப்பட்டார். அதை முத்து, மீனாவிடம் கொட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ, மீதி என் நண்பன் கொடுப்பான் என்று சவால் விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full