சந்தானத்தை நேரில் சந்தித்திருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பழனியப்பன் - வைரலாகும் வீடியோ இதோ
பிரபல நடிகர் சந்தானத்தை 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் பழனியப்பன் நேரில் சந்தித்திருக்கும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. இந்த சீரியல்ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த சீரியலில் கதாநாயகன் முத்துவுக்கு நண்பனாக 'செல்வம்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பழனியப்பன். இதற்கு முன் இவர் படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்நிலையில் தற்போது இவர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்திருக்கும் வீடியோவை தான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பழனியப்பன் வீடியோ:
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தானத்தின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து பழனியப்பன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதோடு சமீபத்தில் வெளியான சந்தானத்தின் 'மதகஜராஜா' படத்தின் வெற்றிக்காகவும் அவருக்கு பழனியப்பன் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். மேலும், பிறந்தநாள் காணும் எங்கள் நாயகன் சந்தானம் பாஸ் அவர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம். மதகஜராஜா வெற்றிக்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்தேன்.
சந்தானத்தை சந்தித்ததை குறித்து:
நடிகர் சந்தானத்தின் குழுவில் உள்ள பலர் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் ரசிகர்களாக இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது என்று பழனியப்பன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடியானாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சந்தானம். சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிம்பு தான். தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தார்.
சந்தானம் திரைப்பயணம்:
அதுமட்டுமில்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பலப்பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பேசி சிம்பு வாங்கிக் கொடுத்தார். காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த சந்தானம் இனிமேல் கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், அறை எண் 305 இல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
மத கஜ ராஜா படம்:
சமீபத்தில், பொங்கலை முன்னிட்டு சந்தானம் காமெடியனாக நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் சில பிரச்சனைகளால் வெளியாகாமலே இருந்தது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இப்படத்தில் வரும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் மீண்டும் சந்தானம் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சந்தானத்திடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.