வக்கீல் சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியடைந்த விஜயா, ரோகினி சொன்ன விஷயம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் தனக்கு தெரிந்ததை செய்து கொண்டிருந்தார். அதோடு விஜயா கடையில் இருப்பதால் இரண்டு நாட்களாகவே ஷோரூமை திறக்கவே இல்லை. அந்த சமயம் வந்த அண்ணாமலை பார்த்தவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் அண்ணாமலை, இந்த நிலைமை தேவையா? என்று கூப்பிட்டார். அப்போது முத்து-மீனா இருவரும் அங்கு வந்து விட்டார்கள். மீனா, உங்களுக்கு எந்த வசதியும் குறைவில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செய்து வாருங்கள் என்று கூப்பிட்டார். விஜயா அமைதியாகவே இருந்தார்.
மனோஜ், இங்கிருந்தால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். சாப்பாடு கூட செய்து தர முடியாது. நீங்கள் மீனா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று ஏதேதோ சொன்னார். அண்ணாமலை, முத்து, மீனா எல்லோருமே கெஞ்சிய பிறகுதான் விஜயா ஒத்துக்கொண்டார். அதற்கு மனோஜ், விஜயா அங்கிருந்து கிளம்பியதால் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் மீனா அம்மாவின் வீட்டிற்கு விஜயா வந்தார். மீனாவின் அம்மா, ரொம்ப மரியாதையாகவும் அக்கறையுடன் விஜயாவை கவனித்துக் கொண்டார். ஆனால், விஜயா வழக்கம் போல தன்னுடைய திமிருத்தனத்தை காண்பித்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது முத்து-மீனா இருவரும் ஆங்கிலம் பேசி இருந்தார்கள். விஜயா கிண்டல் அடித்தார். உடனே சத்யா, இருவருமே ஆங்கிலம் வகுப்பிற்கு செல்வதை பற்றி சொன்னார். அதற்குப்பின் முத்து-மீனா ஆங்கிலம் அன்பிற்கு சென்று விட்டார்கள். அங்கு நன்றாக கிளாசெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த ஒருவர் முத்துவிற்கு நண்பர் ஆனார். அவர் முத்துவை பாராட்டி அவருடைய பிரச்சினையை பற்றி கேட்டார். முத்துவும் தன்னுடைய வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி பேசி இருந்தார். உடனே அவர், நான் வருமானத்துவரித்துறை அதிகாரி கவலைப்படாதே. அந்த பைனான்சியரை சந்தித்து உன் வீட்டு பிரச்சனையை நான் முடித்து வைக்கிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனாவின் அம்மா, விஜயாவிற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். தங்கும் இடத்திலிருந்து சாப்பாடு வரை என எல்லாமே புதிதாக வாங்கி கொண்டு வந்து செய்கிறார். இருந்தாலுமே விஜயா குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜை சந்திக்க வந்த ரோகினி, விஜயாவை பற்றி விசாரிக்கிறார். மனோஜ் நடந்தது எல்லாம் சொல்கிறார். ரோகினி, நாம் எப்படியாவதுசேர வேண்டும். இந்த வீட்டு பிரச்சினை முடிய வேண்டுமென்றால் தயவு செய்து வீட்டை விற்று விடுங்கள். நல்ல ரேட்டுக்கு போகிறது என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மனோஜ், நான் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால், வீட்டில் யாரும் கேட்கவில்லை என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து மனோஜின் வக்கீல் வந்து விடுகிறார். அவர் ரோகினி- மனோஜ் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து கோபப்படுகிறார். பின் இதைப் பற்றி வக்கீல் போன் செய்து விஜயாவிடம் சொல்கிறார். விஜயா ஷாக் ஆகிறார். அதற்குப்பின் முத்துவின் நண்பர் அதிகாரி, பைனான்சியர் வீட்டிற்கு போகலாம் என்று அழைக்கிறார். முத்துவும் தன்னுடைய தந்தையிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அங்கிருந்து சந்தோசமாக கிளம்புகிறார்