முத்து சொன்ன வார்த்தையால் உடைந்து போன அண்ணாமலை, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 6/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, முத்து- மீனாவை பழி வாங்குவதற்காக உடனடியாக 38 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று வக்கீல் இடம் நோட்டீஸில் அனுப்ப சொன்னார். பின் முத்துவின் வீட்டிற்கும் அந்த நோட்டீஸ் வருகிறது. 24 மணி நேரத்தில் மொத்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று நோட்டீசில் இருக்கு. அதை பார்த்து மொத்த வீடுமே பயப்படுகிறது. வழக்கம் போல மனோஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிண்டல் செய்தார். அண்ணாமலை உடைந்து போய் என்ன என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார். எப்படியாவது இந்த வீட்டை மீட்க வேண்டும் என்று முத்துவிடம் சொன்னார்.

அண்ணாமலை, எப்படியாவது வீட்டை மீட்பதற்கான ஏற்பாடு செய்ய என்று எமோசனலாக பேசி இருந்தார். முத்து-மீனா இருவருமே பைனான்சியரை சந்தித்து பேசலாம் என்று ஆபீஸ்க்கு போனார்கள். ஆனால், பைனான்சியர் அங்கு இல்லை. முத்து, பைனான்சியர் இடம் போனில் பேசி இருந்தார். அவர் ஒரு இடத்திற்கு வர சொன்னார். முத்-துமீனா இருவரும் அங்கே கிளம்பி போனார்கள். ஆனால், பைனான்சியர் அங்கு இல்லை. மீண்டும் வேறொரு இடத்திற்கு பைனான்சியர் வர சொன்னார். அங்கும் அவர் இல்லை.

சிறகடிக்க ஆசை:

முத்து-மீனா இருவரும் தெருத்தெருவாக பைனான்சியர் சொல்லும் இடத்திற்கெல்லாம் சென்று கொண்டிருந்தார்கள். பைனான்சியர் வேண்டுமென்றே இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்பதை முத்து புரிந்து கொண்டார். பின் முத்து-மீனா இருவரும் வக்கீலை சந்தித்து பேசி இருந்தார்கள். வக்கீல், இப்போது கோர்ட் லீவ். எமர்ஜென்சி கேஸ் மட்டும்தான் நடக்கப்படும். எதுவாக இருந்தாலும் பத்து நாட்கள் கழித்து தான் கோட்டில் பேச முடியும் என்றார். இதைக் கேட்டு முத்து- மீனா இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. பின் சோகத்துடன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அண்ணாமலை, என்ன ஆனது என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, கோர்ட் லீவ் என்பதால் ஜப்தி ஆர்டரை கேன்சல் செய்ய முடியாது என்று வக்கீல் சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று புரியவில்லை என்கிறார். இதைக் கேட்டு அண்ணாமலை உடைந்து போகிறார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று சொல்லி கதறுகிறார். இதெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. வழக்கம்போல மனோஜ், இந்த வீட்டை விற்று விடலாம் என்று சொல்கிறார். முத்து-ரவி இருவரும் மனோஜை திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் முத்து, அவர்கள் நம்மை வீட்டை விட்டு வெளியே அனுப்பி சீல் வைப்பதற்குள் நாமே இங்கிருந்து சென்றுவிடலாம் என்று சொல்கிறார். அண்ணாமலைக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. மீனா, எல்லோரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறார். விஜயா இவ்வளவு நடந்துமே மீனாவின் குடும்பத்தை தரக்குறைவாக பேசுகிறார். பின் சுருதி வீட்டிற்கு செல்வதாக விஜயா சொல்கிறார். அண்ணாமலை, மீனாவின் வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். பின் அண்ணாமலை- விஜயா இருவருமே பிரிந்து ஒவ்வொரு திசைக்கு செல்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full