விஜயா, மனோஜின் பித்தலாட்ட வேலையை அறிந்த அண்ணாமலை, அனல் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா- ரேகா இருவரும் மீனா, முத்திருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அவர்களை பின் தொடர்ந்து வந்த சிந்தாமணி ஷாக் ஆனார். கோபத்தில் சிந்தாமணி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் மீனா, தலைவியானதால் கேக் வெட்டி செலபரேட் செய்தார்கள். அதற்குப்பின் ரேகா, தான் சிந்தாமணி மகள் என்ற உண்மையை சொல்லி விட்டார். இதனால் மீனா, நீங்கள் இருவரும் பேச வேண்டாம், காதலிக்க வேண்டாம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றெல்லாம் புலம்பினார். உடனே முத்து, பெரியவர்கள் செய்த தவறுக்கு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள்.
உங்கள் காதலுக்கு நான் சப்போர்ட் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் ஆட்டோவில் மனோஜ், ஹரிணி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆட்டோவில் செல்வது செட் ஆகாதால் ஹரணிக்கு வாந்தி வந்து விட்டது. மனோஜ் கேரிங்காக ஹரிணியை பார்த்து கொண்டார். அதை பார்த்து ரோகிணிக்கு கோபம் வருகிறது. மனோஜ் இல்லாத நேரம் பார்த்து ஹரணியிடம் ரோகிணி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, சத்யா- ரேகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை பற்றி தன்னுடைய கணவரிடம் சொல்லி கோபப்பட்டார்.
சிறகடிக்க ஆசை:
சிந்தாமணி, அந்த சத்யா சரியில்லை.அவன் ஏற்கனவே திருட்டு வேலை செய்திருந்தவன். இப்போதுதான் அவன் வேலைக்கு வந்திருக்கிறான். அவன் குடும்பமே மோசமான குடும்பம் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். ரேகாவின் அப்பாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி, ரேகாவை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவள் வெளியே இருந்தால் காதலை மறந்து விடுவாள் என்றார். இன்னொரு பக்கம் சுருதியின் ஓட்டலுக்கு முத்து, மீனா, மனோஜ், ஹரிணி, ஸ்வேதா எல்லோருமே சென்று இருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
ஹரணிக்கு, ஸ்ருதியின் ஹோட்டல் ரொம்பவே பிடித்து விடுகிறது, பாராட்டினார். ஆனால், மனோஜ் வழக்கம்போல எல்லோரையும் கிண்டல் செய்தார். ஹரணிக்கு பிடிக்கவே இல்லை. அதற்குப்பின் ஹரிணி சாப்பிட்டார். மனோஜ் ஓவராக சீன் போட்டு கிண்டல் கேலி செய்தார். ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரிணி மனோஜை திட்டி விட்டார். அதற்குப்பின் ஹரிணி, ரோகினியின் பார்லருக்கு சென்றார். அங்கு ரோகினியின் மொபைலில் மனோஜ் போட்டோவை பார்த்த ஹரிணி விசாரித்தார். அதற்கு ரோகிணி, இவர்தான் என்னுடைய கணவர் என்றார். உடனே ஹரிணி, இவருடன் தான் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றார். ரோகிணி அழுது டிராமா போட்டு நடித்தார்.
https://www.youtube.com/watch?v=ykt0Z0Cuj8Q
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்வேதா, ஹரணியின் குடும்பத்தினர் எல்லோருமே விஜயாவின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது ஸ்வேதா, இன்னும் ரோகிணி- மனோஜ் இருவருக்கும் விவாகரத்து கிடைக்காத விஷயத்தை பற்றி கேட்கிறார். ஹரணி, ரோகினி பேசிய விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை விஜயாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.