வேதனையில் தவிக்கும் மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த யோசனை, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 13/3/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் பைனான்சியர் மீனாவின் நல்ல மனதையும் அவருடைய உழைப்பையும் பாராட்டி கடனாக பணம் தருவதற்கு ஒற்றுக்கொண்டார். மீனாவும் சந்தோஷமாக தன்னுடைய டெக்கரேஷன் வேலையை செய்தார். நல்லபடியாக வேலையும் செய்து முடித்து விட்டார். இதை பார்த்து சிந்தாமணி கோபப்பட்டார். அதற்குப்பின் மீனா தன்னுடைய கணவருக்கு போன் செய்து டெக்ரேசன் செய்து முடித்ததை பற்றி சந்தோஷமாக பேசி இருந்தார்கள். மறுநாள் காலையில் வேலை முடிந்து விட்டது மீதி பணம் கொடுங்க என்று மீனா கேட்க, நான் மொத்த பணத்தையும் அன்றே கொடுத்துவிட்டேன்.

அதற்கான பத்திரத்தில் நீ கையெழுத்து போட்டு விட்டாய் என்று மேனேஜர் சொன்னார். இதை கேட்டவுடன் ஷாக் ஆன மீனா, நீங்கள் அட்வான்ஸ் மட்டும் தான் தந்தீர்கள் என்று சண்டை போட்டார். பின் அங்கிருந்தவர்களிடம் மேனேஜர், பத்திரத்தை படித்து பாருங்கள். மொத்த பணத்தையும் கொடுத்து விட்டேன். இந்த பெண் பிரச்சனை செய்கிறார் என்று சொன்னார். மீனா, உங்கள் மீது இருந்த நம்பிக்கையில் தான் அதை படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டேன் என்று கெஞ்சி கேட்டு கதறி அழுதார். ஆனால், அந்த மேனேஜர் மீனாவை அடித்து துரத்தி விட்டார். இதை பார்த்து சிந்தாமணி ரொம்பவே சந்தோஷப்பட்டு விஜயாவிற்கு போன் பண்ணி சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் சிந்தாமணி, இனி மீனா டெக்கரேஷன் வேலையை ஓரங்கட்டி வைத்து விடுவாள் என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்பட்டார். ஆனால், என்ன வேலை செய்தார் என்று சிந்தாமணி சொல்லவில்லை. சந்தோஷத்தில் ரவிக்கு போன் செய்த விஜயா, சாப்பாட்டை ஆர்டர் செய்தார். இன்னொரு பக்கம் மீனா, மண்டபத்தின் ஓனரிடமே சென்று நடந்த விஷயத்தை சொன்னார். ஆனால், அவர், சிந்தாமணிக்கு கொடுக்க வேண்டிய ஆர்டரை புது ஆட்களுக்கு கொடுத்து தேவை இல்லாத வேலை செய்கிறாய் என்று மேனேஜரை திட்டி மீனாவை அடித்து வெளியே அனுப்ப சொன்னார்.

நேற்று எபிசோட்:

மீனா, எவ்வளவு கெஞ்சி கதறியுமே அந்த ஓனரும் கேட்கவில்லை, மேனேஜரும் கேட்கவில்லை. மனவேதனையில் மீனா வீட்டிற்கு வந்தார். வீட்டில் சந்தோஷத்தில் விஜயா, எல்லாருக்குமே சாப்பாடு கொடுத்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா நடந்ததை எல்லாம் சொன்னார். உடனே முத்து, கோபத்தில் அந்த மேனேஜரை அடித்து கத்தியால் குத்த போனார். ஆனால், கடைசியில் அது மீனா கண்ட கனவு. அப்போது முத்து போன் செய்தார். ஆனால், அவரிடம் எதுவும் சொல்லவில்லை மீனா.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, மண்டபத்தில் நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். உடனே அவர் தம்பி, எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் வா என்று மீனாவை தனக்கு தெரிந்த போலீஸ் இடம் அழைத்து சொல்கிறார். பின் அவரிடம் மீனா நடந்ததை சொல்ல, அவர் பத்திரத்தில் என்ன இருக்கோ அதுதான் கோர்ட் ஏற்றுக்கொள்ளும். இதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்கிறார். இதனால் மீனா இன்னும் மனமடைந்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்கிறார். அப்போது முத்து, பணம் எல்லோருக்கும் கொடுத்து விட்டாயா? எல்லா வேலையும் முடிந்து விட்டதா? என்று கேட்க, உள்ளுக்குள் வேதனையை வைத்துக்கொண்டு வெளியில் காண்பிக்காமல் மீனா பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவிடம் விஜயா, ஏன் சமைக்கவில்லை? எங்கே போய் ஊர் சுற்றுகிறாய்? என்று வழக்கம்போல் அவரை சண்டை போடுகிறார். மீனா, எனக்கு மனசு சரியில்லை என்று சொல்ல, விஜயா கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே மீனா, சிந்தாமணி எதுவும் சொல்லவில்லையா? அவரிடம் தெரிந்து கொள்ளுங்கள் என்று கோபப்படுகிறார். அப்போது அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். அவர், கடைக்காரன் என்னை ஏமாற்றி விட்டான். நான் அவன் வழியிலேயே ஏமாற்றி விட்டேன் என்று சொன்னவுடன் மீனாவும் இதுதான் சரியான வழி. அந்த மேனேஜருக்கு பாடம் புகட்டனும் என்று நினைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full