அவமானத்தில் வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம் - அனல் பறக்கும் சிறகடிக்க ஆசை

By subhashini · 3/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி பணத்தை கொண்டு போய் கொடுத்ததாலும், சிந்தாமணி சொன்னதாலும் பைனான்சியர் போலீஸ் ஸ்டேஷன் சென்று மனோஜ் மீது இருக்கும் கேசை வாபஸ் வாங்குகிறார். அதோடு ரோகினியை பெருமையாக பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து மனோஜ்க்கு மனம் தடுமாறுகிறது. இதை பார்த்து முத்து- மீனா இருவரும் கோபப்பட்டார்கள். பின் ரோகிணியின் சதி வலையில் மனோஜ் விழக்கூடாது என்று போராடினார்கள். இருந்தாலுமே மனோஜ், ரோகினி செய்த செயலை நினைத்து சந்தோஷப்பட்டார்.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை எல்லாம் சொன்னார். ரோகினி எதற்காக இப்படி செய்யணும் என்று ஸ்ருதி-ரவி கேட்டார்கள். முத்து, மனோஜை தன் வலையில் விழ வைக்க தான் இப்படி எல்லாம் செய்தார். அதோடு இந்த புகார் கூட ரோகினி தான் கொடுத்து இருக்கனும் என்றார். உடனே மனோஜ், ரோகிணி செய்த செயலை பாராட்டி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலைக்கு ஒன்றுமே புரியவில்லை. கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி அவள் மூலம் வந்த எந்த உதவியும் தேவையில்லை. அவளை பெருமையாக பேசுவதை நிறுத்து என்றெல்லாம் சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

விஜயா, ரோகினி எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். அவளுக்கு சப்போர்ட் செய்து இந்த வீட்டில் பேசாதே என்று மனோஜ்க்கு எச்சரிக்கை விட்டு சென்றார். பின் முத்து-மீனா இருவரும் ரோகிணியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும். இதற்கு பின்னாடி சிந்தாமணி தான் இருப்பாள் என்று பேசிக் கொண்டார்கள். பின் மீனா, சிந்தாமணிக்கு எதிராக ஆதாரங்களையும் திரட்டிக்கொண்டு அவருடைய வீட்டிற்கு போனார். அப்போது சிந்தாமணி, ரொம்ப நக்கலாக மீனாவையும் அவருடன் இருக்கும் ஆட்களையும் பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

மீனா, நீ வட்டிக்கு பணம் கொடுத்து அவர்கள் அதிகமாக வட்டி கட்டியும் பத்திரத்தையும் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். ஒழுங்கு மரியாதையாக அவர்களுடைய பத்திரத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன் என்றார். சிந்தாமணியும் சவால் விட்டார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி அவருடைய வீட்டு பத்திரத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டுக்குள் வருவதைப் பற்றி எல்லாம் ரோகினி பேசி இருந்தார். மனோஜ், என் அம்மா உன்னை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.

https://www.youtube.com/watch?v=l6DzukAxYTQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிந்தாமணி, அந்த வீட்டை நாம் அடைய வேண்டும். அதற்கான வழி ஏற்பாடு செய் என்று சொல்கிறார். பைனான்சியர் 38 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் சொல்லிவிடுகிறார். இதை அறிந்த அண்ணாமலை, வீட்டை மீட்க முடியாதா? என்று ரொம்பவே வருத்தப்பட்டு அழுகிறார். இனி அங்கு இருந்து அசிங்கப்பட தேவையில்லை என்று அண்ணாமலை குடும்பம் மொத்தமுமே வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். விஜயாவும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full