மனோஜுக்கு பைனான்சியர் வைத்த ஆப்பு, கிரிஷ் மீது அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகேம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மாமியார் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதற்காக தோழி கொடுத்த மருந்தை டீயில் கலந்து ரோகிணி கொடுத்தார். ஆனால், உண்மையில் அது தூக்க மருந்து கிடையாது. விட்டமின் மாத்திரை. அது முன்பிருந்தது போல அதிகமான சக்தியை கொடுக்கும் என்று மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து சொன்னார். அதற்கேற்ப விஜயாவுமே வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருந்தார். அண்ணாமலை வீட்டிற்கு வரவில்லை என்று மனோஜ், முத்து எல்லோரையுமே விஜயா திட்டிக் கொண்டிருந்தார். பின் விஜயா, நான் பூஜை செய்ய போகிறேன் என்று மீனாவை ஏற்பாடு செய்ய சொன்னார்.
பூஜை செய்யும் போது ரோகினியும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு தலையில் கொட்டிக்கொண்டு கையில் சூடத்தை எல்லாம் ஏற்றி வைத்து விஜயா டார்ச்சர் செய்தார். விஜயா, உன்னால்தான் மனோஜ் கடன் வாங்கினான் என்று மொத்த பலியையும் ரோகினி மீது போட்டு விட்டார். இதையெல்லாம் பார்த்து முத்து, அப்பா நாளைக்கு வரப்போகிறார் என்று பொய் சொல்லி விட்டார். அதை நம்பி விஜயாவும் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் அண்ணாமலை வீட்டிற்கு வருவார் என்று ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா. முத்து உண்மையை சொல்லும் நேரம் பார்த்து அண்ணாமலை வீட்டிற்கு வந்து விட்டார். விஜயா எமோஷனலாக அண்ணாமலையை கட்டிப்பிடித்து அழுதார்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்க்கு பணம் கொடுத்த பைனான்சியர் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் முத்து பயங்கரமாக கோபப்படுகிறார். அண்ணாமலை, முத்துவை தடுத்து நிறுத்தி பைனான்சியரை சந்தித்து பேசியது எல்லாம் சொல்கிறார். அப்போது பைனான்சியர், உங்கள் அப்பா ரொம்ப நல்லவர். 3 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு தன் குடும்பத்தை எதுவும் செய்ய வேண்டாம் என்று ரொம்ப கெஞ்சினார். இப்படிப்பட்ட அப்பா கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரொம்ப பெருமையாக அண்ணாமலையை பற்றி பேசுகிறார்.
இன்றைய எபிசோட்:
இனிமேல் உங்கள் குடும்பத்தில் உள்ள யாரையும் நான் எதுவும் செய்ய மாட்டேன். மீதி இருக்கும் பணத்தை மனோஜ் மாதம் கொடுக்க வேண்டும். அதற்கு ரோகினி- மனோஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் பைனான்சியர். மனோஜ், அமைதியாகவே தயங்கி நிற்பதால் விஜயாவே திட்டி கையெழுத்து போட சொல்கிறார். அதற்கு பின் பைனான்சியர் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் ரோகினி- மனோஜ் இருவரும் பிசினஸை எப்படியாவது டெவலப் செய்து கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மனோஜ் பிஏ, நண்பர் எல்லோரும் தேவையில்லாத ஐடியா சொல்கிறார்கள். ரோகிணி, இப்போது இருக்கும் தொழிலை டெவலப் செய்தால் போதும் என்று ஆறுதல் சொல்லி தைரியப்படுத்துகிறார். அதற்குப்பின் கிரிஷ், ஸ்கூலில் பீஸ் கட்ட சொல்லி லெட்டர் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து முத்து, நான் கட்டுகிறேன் என்கிறார். கிரிஷ் கேட்டுக் கொண்டதால் ரோகிணி, மனோஜை கட்ட சொல்கிறார். உடனே விஜயா திட்டுகிறார். பின் ஒரு வழியாக முத்து பணத்தை கட்ட ஒத்துக் கொள்கிறார். அதற்கு பின் அண்ணாமலை, தன் அம்மாவை இழந்த சோகம் கிரிஷ் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. கிரிஸ் பாட்டி, எதற்காக கிரிஷை இங்கு விடணும். ஏதோ மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது