அண்ணாமலை போட்ட கண்டிசனால் கொந்தளித்த விஜயா, ரோகினி கேட்ட உதவி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், முத்து உடைய இரு வக்கீல்களும் சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள். பின் செல்வம் தரப்பில், அருணின் அம்மா கவன குறைவால் தான் விபத்து நடந்தது என்று போலீஸ் சொன்னார் என்றார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று வக்கீல் சொல்கிறார். செல்வம் ஒரு லட்சம் தருகிறேன் என்றார். கோபப்பட்ட அருண், முத்துவின் அப்பா மீது கார் ஏத்தி விட்டு சமாதானம் பேசலாம் என்று சொல்வதால் சண்டை நடக்கிறது.
வக்கீல், அருண்- முத்து இருவரையும் சமாதானம் செய்தார்கள். பின் அருண், 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். முத்து, முடியாது என்றார். பின் 15 லட்சம் என்று அருண் சொன்னார். பின் முத்து, டிரைவர் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இதனால் அருண், ஐந்து லட்சத்திற்கு கீழ் குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்வதால் முத்து ஒத்து கொண்டார். பின் அருண், அதை ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவின் வீட்டிற்கு சென்ற ரவி, எதற்காக இப்படி டார்ச்சல் செய்கிறீர்கள்? எனக்கு வேலை இருக்கிறது.
சிறகடிக்க ஆசை:
இப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்ணாதீர்கள் என்றார். நீத்து அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் டார்ச்சல் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா இருவரும் செல்வம் விஷயத்தைப் பற்றி சொன்னார்கள். அண்ணாமலை, எப்படியாவது செல்வத்தை அந்த பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வா என்றார். இன்னொரு பக்கம் கிரிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. பின் ரோகிணி டாக்டரிடம் போன் செய்து சொன்னார். அப்போது கிரிஷ், முத்து- மீனா பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் லட்சுமி, மீனா- முத்துவை பார்த்தால் கிரிஸ் உடம்பு சரி ஆகிவிடும். அவர்களிடம் பேசு என்கிறார். ரோகினி, தன் அம்மாவை திட்டி விடுகிறார் இன்னொரு பக்கம் அண்ணாமலை, வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். மனோஜ் ரூமில் முத்து-மீனா தங்கிக் கொள்ளட்டும். மனோஜ் வெளியில் தூங்கட்டும் என்று சொல்கிறார். இதனால் விஜயா ருத்ர தாண்டவம் ஆடுகிறார். மனோஜ், ரூம் தர முடியாது என்கிறார். கடைசியில் அண்ணாமலை, மனோஜை திட்டி விட்டு முத்து- மீனாவை ரூமில் தங்க சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஸ்ருதி ஹோட்டலுக்கு வந்த ரோகினி, கிரிஷ் உடல்நிலை சரியில்லை. அவன் முத்துவையும் உங்களையும் பார்க்கணும் என்று சொல்கிறார். அதற்கு மீனா, எதுவாக இருந்தாலும் மாமாவிடம் கேட்டுதான் செய்தேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சிந்தாமணி சந்தித்த விஜயா, மனோஜ்க்கு கல்யாணம் செய்யணும். நல்ல பொண்ணை பாருங்கள் என்று சொல்கிறார். அதற்கு சிந்தாமணி, ரவி படித்திருக்கிறான். ஆனால், முத்து-மீனாவை பற்றி என்ன சொல்வீர்கள்? அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்கிறார். விஜயா, சீக்கிரத்தில் அதை செய்கிறேன் என்கிறார்.