மீனாவிடம் மோசமாக நடந்து கொண்ட விஜயா, கோபத்தில் வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, நன்றி கூடவா உங்களிடம் சொல்லவில்லை என்றார். பின் தன்னுடைய கணவர் பெருந்தன்மையாக நடந்து கொள்வதை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் தலையில் அடிபட்டதை பார்த்து சீதா பயந்து போனார். உடனே அருண், ஒரு மூன்று பேர் விதியை மீறி சென்றதால் நான் அவர்களை பிடித்து கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை தாக்கி விட்டார்கள். நானும் சமாளித்து பார்த்தேன் முடியவில்லை. அந்த பக்கம் வந்த முத்து காப்பற்றினார். ஆனால், முத்து அந்த சமயத்தில் எப்படி வந்தார் தெரியவில்லை.
அவர் வைத்த ஆளாகத்தான் அந்த நபர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன உடனே சென்று விட்டார்கள் என்றார். இதையெல்லாம் கேட்டு சீதாவிற்கு முத்து மீது கோபம் வந்தது. பின் சீதா, தன் அக்காவிற்கு போன் செய்தார். இதை பார்த்து உள்ளுக்குள் அருண் சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், மனோஜனின் நண்பர், ரோகினி மூவருமே ஸ்கூலில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்கூலில் எடுத்த போட்டோவை எல்லாம் மனோஜின் தோழர் காண்பிக்க, அதில் கிரிஷ் இருந்த போட்டோவை ரோகிணி எடுத்து கிழித்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா, சீதாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது சீதா, உன்னுடைய புருஷன் தான் ஆள் வைத்து அருணை அடித்திருந்தார். எதற்கு இப்படி எல்லாம் செய்யணும் என்று கோபமாக கேட்டார். மீனா, அவர் ஒன்றும் செய்யவில்லை. அருண் தான் தவறாக சொல்லி இருக்கிறார் என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் சீதா, முத்துவை ரவுடி என்று சொல்லி விட்டார். அதனால் கோபத்தில் மீனா, சீதாவை அடித்து விட்டார். இதனால் கோபப்பட்ட சீதா, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நேற்று எபிசோட்:
நான் உன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சென்று விட்டார். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா ரொம்பவே வருத்தப்பட்டார். மீனாவுமே சீதாவை அடித்தது நினைத்து வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் சீதாவுமே நடந்த சண்டையை நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் விஜயாவின் யோகா கிளாஸில் சில பேர் சேர்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாக விஜயா சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது புது நபர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர் பார்வதிக்கு ரூட் விடுவது போல் தெரிந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் யோகா கிளாசில் சிந்தாமணியும் மாணவியாக சேர்கிறார். அந்த கிளாசுக்கு வந்த புது நபர் பார்வதியை ஒன்சைடாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் மீனா, உடம்பு அசதியாக இருப்பதால் தூங்கிருக்கிறார். வீட்டிற்கு வந்த விஜயா கிச்சனில் சாப்பாடு எதுவும் இல்லாததால் கோபத்தில் தண்ணீரை எடுத்து தூங்கி இருந்த மீனாவின் முகத்தில் ஊற்றி விடுகிறார். இதை பார்த்த முத்து, கோபத்தில் விஜயா கையிலிருந்து ஜக்கை புடிங்கி கீழே போடுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விடுகிறார்கள். அப்போது அண்ணாமலை, என்ன நடந்தது? என்று கேட்டார். முத்து நடந்ததை சொன்னவுடன் ஸ்ருதி, அண்ணாமலை, ரவி எல்லோருமே விஜயாவை திட்டுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
வழக்கம் போல் மனோஜ் தன்னுடைய அம்மாவிற்கு தான் சப்போர்ட் செய்கிறார். இருந்தாலுமே அண்ணாமலை கோபத்தில் விஜயாவை பயங்கரமாக திட்டி அனுப்பி விடுகிறார். பின் விஜயா, செய்த தவறுக்காக மீனாவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். உடனே மீனா, நீங்கள் எதுவும் கேட்கத் தேவையில்லை மாமா என்று சொல்கிறார். அதற்குப்பின் மொட்டை மாடியில் அண்ணாமலை திட்டியதை நினைத்து பார்த்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பின் அண்ணாமலை, விஜயாவை சமாதானம் செய்யப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.