மனோஜ் சொன்ன வார்த்தையால் பாளர்ன்னு விட்ட அண்ணாமலை, உடைந்து போன முத்து- சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, என்னை பற்றி எந்த விவரமும் சொல்லக்கூடாது என்றார். அதற்குப்பின் கிரிஷை செக் செய்த டாக்டர், கிரிஷுக்கு ஒன்றுமில்லை. அவருடைய அம்மா இல்லாத ஏக்கம் தான். மற்றபடி அவர் நன்றாக இருக்கிறார் என்றார். இன்னொரு பக்கம் கிரிஷ், ஒரு பையனை அடித்ததால் அந்த பையனுடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்திருந்தார்கள். இதனால் போலீஸ் கிரிசை விசாரிப்பதற்காக ஸ்கூல் வந்திருந்தார்கள். அப்போது ஆசிரியர், மகேஸ்வரிக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொன்னார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆனார்.
கிரிஸ் செய்த வேலையால் அந்த சிறுவனுடைய பெற்றோர் கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று புகார் அளித்ததார். இதனால் போலீஸ், கிரிஷை கைது செய்ய பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தார்கள். இதை அறிந்த ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் பதறினார். பின் ஸ்கூலுக்கு வந்த முத்துவிடம் போலீஸ் விவரத்தை சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். உடனே முத்து போலீஸிடம் கெஞ்சி கூத்தாடினார். அதற்கு போலீஸ், அந்த சிறுவனின் அப்பா ரொம்ப பெரிய வீடு. அவர் கேஸ் வாபஸ் வாங்கினால் நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
பின் மகேஸ்வரி, கிரிஸ் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் ரோகினி, தனக்கு தெரிந்த வக்கீல் இடம் பேசி இருந்தார். ஆனால், வக்கீலுமே இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றார். ரோகினிக்கு ஒண்ணுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் அப்பாவை சந்தித்து பேசி இருந்தார்கள். அதற்கு அந்த சிறுவன் அப்பா, கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார். உடனே முத்து அவருடைய காலில் விழுந்து கெஞ்சி கதறினார். இருந்தாலுமே அந்த சிறுவனின் அப்பா மனம் இறங்கவில்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கிரிஷ் வாழ்க்கைக்காக முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த சிறுவனின் அப்பா கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலுமே முத்து-மீனா இருவருமே அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார்கள். கடைசியில் அந்த சிறுவனின் அப்பா, முத்துவை உள்ளே அழைத்து பேச, முத்து, மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். உடனே அந்த சிறுவனின் அப்பா, நான் கிரிஷ்க்கு சில டெஸ்ட் வைப்பேன். அதற்கு பிறகு தான் நான் இந்த கேசை வாபஸ் வாங்கலாமா? என்று முடிவு செய்வேன் என்றார். அதற்குப்பின் மகேஸ்வரி வீட்டிற்கு முத்து-மீனா போனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசொட்டில் முத்து, க்ரிஷிடம் அந்த சிறுவனின் அப்பா பேசணும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் அவர் முடிவெடுப்பாராம் என்கிறார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகிணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், கிரிஷ் செய்த வேலையை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்கிறார். ரோகினி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மனோஜ், கிரிஷ் இப்படி இருக்க காரணம் முத்து தான். இரண்டு பேரும் ரவுடி தான் ஆக போகிறார்கள் என்று ரொம்ப மோசமாகவும் ஏளனமாகவும் பேசுகிறார். இதை கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மனோஜின் சட்டையை பிடித்து சண்டைக்கு போகிறார். அப்போது மனோஜ், நீயும் சீர்திருத்த பள்ளிக்கு போனவ தானே என்று சொல்லி விடுகிறார். இதனால் முத்து மனமடைந்து நிற்கிறார். உடனே அண்ணாமலை கோபத்தில் மனோஜை அடித்து விடுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே திட்டி அனுப்பி விடுகிறார். மீனா, முத்து வாழ்க்கையில் நடந்ததை பற்றி விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.