விஜயா செய்த கேவலமான வேலையால் கொந்தளித்த அண்ணாமலை, மீனா சொன்ன விஷயம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, முத்து எல்லோரும் கிரிஸை வீட்டில் தங்குவதற்கு ஒத்துக்கொண்டார்கள். வழக்கம் போல மனோஜ்- வித்யா தான் வேண்டாம் என்று சண்டை போட்டார்கள். பின் அண்ணாமலை, கிரிஷை அங்கேயே தங்க வைத்தார். அதற்குப்பின் விஜயா, கிரிஷை இங்கிருந்து எப்படியாவது அனுப்பி விடணும் என்று ரோகிணியிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பார்வதி- சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லி வீடியோ எடுத்து போட்டார்கள். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது.
பார்வதி வீட்டிற்கு சிந்தாமணி, ரோகினி, விஜயா எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது விஜயா, கிரிஸை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும். என்ன செய்வது? என்றார். உடனே பார்வதி, இந்த பாவம் செயலை செய்வதற்கு மீட்டிங்கா? என்னால் முடியாது என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்கு சிந்தாமணி, அந்த பையனுக்கு சூடு போடுங்கள். அவன் வீட்டை விட்டு போய் விடுவான் என்றார். உடனே ரோகினி, அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றார். பின் சிந்தாமணி, என்னுடைய ஆட்களை வைத்து அந்த பையனை கடத்தி ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறேன்.
சிறகடிக்க ஆசை:
அவன் உங்கள் வீட்டுக்கே வரமாட்டான் என்றார். இதைக்கேட்டு ரோகினி ஷாக் ஆனார். விஜயா, நல்ல ஐடியா என்றார். பின் ரோகிணி, மீனாவிற்கு போன் செய்து கிரிஸை கடத்தும் விஷயத்தை பற்றி சொன்னார். பதறி போன மீனா, கிரிஷை அழைப்பதற்காக போக சொன்னார். அதற்குள்ளே சிந்தாமணி, தன்னுடைய ஆட்களை வைத்து கிரிஷை கடத்தி விட்டார். கிரிஷை கடத்திக் கொண்டு போகும் வண்டியை முத்து பார்த்துவிட்டு பின் தொடர்ந்து சென்றார். பின் இந்த விஷயத்தை பற்றி முத்து, மீனாவிடம் சொன்னார். இதைப் பற்றி மீனா சொன்ன உடன் ரோகிணி ரொம்பவே பதறி அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து நல்லபடியாக கிரிஷை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். அண்ணாமலை, ஏன் கிரிஷ் பயந்து போயிருக்கிறான் என்று கேட்கிறார். அதற்கு முத்து, அவனை சிந்தாமணி ஆட்களை வைத்து கடத்திருக்கிறார். அதனால் தான் அவன் அப்படி இருக்கிறான். சிந்தாமணி வெறும் அம்பு தான். அதை ஏவி விட்டது அம்மாதான் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பயந்து கொண்டிருக்கிறார். பின் அண்ணாமலை, என்ன காரியம் செய்தாய்? என்று கேட்கிறார். அதற்கு விஜயா, எனக்கு அவன் இங்கு இருப்பது பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி செய்தேன் என்று சொல்கிறார். கோபத்தில் அண்ணாமலை விஜயாவை அடிக்கப் போகிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து தடுத்து விடுகிறார். பின் அண்ணாமலை, போலீசுக்கு போன் செய்து விஜயாவை கைது செய்ய சொல்கிறார். வீட்டில் எல்லோருமே கேட்டுக் கொண்டதால் அண்ணாமலை அமைதியாகி விடுகிறார்.
மீனாவும் விஜயாவிற்கு அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் விஜயா, சிந்தாமணியிடம் ஃபோன் செய்து முத்து அந்த பையனை காப்பாற்றி விட்டான் என்று திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் மீனா, கிரிஷை வீட்டுக்கு கொண்டு வருவது தான் என்னுடைய வேலை. அவன் உன்னுடைய அறையில் தூங்க வைத்து மனோஜுடன் பழக வைப்பது உன்னுடைய வேலை. சீக்கிரம் அந்த வேலையை செய்து முடி. வீட்டில் உண்மையைச் சொல்ல பாரு என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.