அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன மொத்த குடும்பம் - அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 30/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ், மனோஜ் ஆபீசிற்கு வந்தார்கள். அப்போது போலீஸ், கடத்தல் விஷயமாக தினேஷை பிடித்து விட்டோம். ஆனால், காரில் அடிபட்டதால் அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் மறந்து விட்டது. அவன் கல்யாணி என்ற பெயரை மட்டும் சொல்கிறான். உங்களுக்கு தெரியுமா? என்றார். மனோஜ் ஷாக் ஆகி அதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று மறைத்து விட்டார். பின் போலீஸ் சென்றவுடன் மனோஜ், கல்யாணி பற்றி ரொம்ப மோசமாக திட்டி பேசினார்.

மனோஜ், ஆர்டர் கிடைக்காமலேயே ஆபீஸ் திறப்பதற்கு 30 லட்சம் கடன் வாங்கி இருப்பதால் அந்த கடன் கொடுத்த கந்து வட்டி முத்து வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார். மனோஜ், எடுத்து சொல்லியுமே அவர் கேட்கவில்லை. கந்து வட்டி, உன்னுடைய பெற்றோர்கள் கையெழுத்து போட்டால் இந்த இடத்தை விட்டு கிளம்பவும் இல்லை என்றால் உன்னை தூக்கி விடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள். அண்ணாமலை வேறு வழியில்லாமல் மனோஜ் வாங்கிய கடனை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்து முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. அந்த கந்துவட்டி ஆள் கிளம்பிய உடன் முத்து, மனோஜிடம் சண்டை போட்டார்.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை, முத்துவை தடுத்தார். பின் மனோஜ், யாரும் எனக்காக கஷ்டப்பட தேவை இல்லை. அவரை சொத்து பிரித்துக் கொடுங்கள் என்றார். இதை கேட்டு அண்ணாமலை உடைந்து விட்டார். விஜயா, மனோஜை திட்டி யாருக்காகவும் இந்த வீட்டை விற்க முடியாது. உன் கடனை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். அதற்குப்பின் கோபத்தில் இருக்கும் மனோஜ், கிரிஷை அடித்தார். ரோகினி, ஏன் அடித்தாய்? என்றார். அதற்கு மனோஜ், ரோகினி கழுத்தை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். பின் அது கல்யாணி பேய் இல்லை என்றவுடன் மனோஜ், ரோகிணி மீது கையை எடுத்து விட்டார். இன்னொரு பக்கம் அண்ணாமலை வேதனையில் புலம்ப முத்து ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி, பார்வதி இடம் பண உதவி கேட்கிறார். பார்வதி, நான் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால், உனக்கு மீனா கேரண்டி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் ரோகினி, மீனாவை தனியாக அழைத்து சென்று பேசுகிறார். ஆனால், மீனா முடியாது என்று அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் வீட்டில் முத்து, பொய் சொல்லக்கூடாது. ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு பல பொய்கள் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கிரிஷிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது எல்லாம் கேட்ட மீனா, தன்னுடைய கணவரிடம் ரோகிணி பற்றி எல்லா உண்மையும் சொல்கிறார். ஆனால், முத்து அங்கு இல்லை.

சீரியல் ட்ராக்:

இது எல்லாம் கேட்ட ரோகிணி கோபப்பட்டு கையை அறுத்துக் கொள்வது போல டிராமா செய்கிறார். உடனே அந்த இடத்திற்கு வந்த முத்து, என்ன பிரச்சனை? என்கிறார். அதற்கு ரோகிணி, மனோஜ் கடன் தொல்லை என்றெல்லாம் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். மறுநாள் காலையில் அண்ணாமலை தன்னுடைய நண்பர், வக்கீல் எல்லாம் வீட்டிற்கு வர வைத்து சொத்தை நான்கு பங்காக பிரிப்பது பற்றி பேசுகிறார். முத்து-மீனா, சுருதி- ரவி எல்லோருமே வேண்டாம் என்று தடுக்கிறார்கள். மனோஜ், யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full