ஸ்ருதி செய்த வேலையால் கோபப்படும் நீத்து- ரவி, அருணிடம் உதவி கேட்ட சீதா - சிறகடிக்க ஆசை

By subhashini · 21/4/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, முத்து என்ன சொல்ல வருகிறார் என்று கூட கேட்காமல் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த முத்து, நீங்கள் பேசி முடித்து விட்டீர்களா? நான் இந்த வீட்டை வைத்து பணம் கேட்கவே இல்லை. நான் கடன் வாங்க போகிறேன் என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன். பாட்டியிடம் உதவி கேட்க போகிறேன் என்று முத்து சொன்னார். உடனே மீனா, பாட்டியிடம் கூட உதவி வேண்டாம். எனக்கு தெரிந்த பைனான்ஸரிடம் கேட்கலாம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, சிந்தாமணிக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடி இருந்தார். பார்வதிக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்போது விஜயா, மீனா ஆர்டர் எடுக்க முடியாமல் பணத்திற்காக அவஸ்தைப்படுகிறார். கண்டிப்பாக இந்த ஆர்டர் உங்களுக்கு தான் என்று சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு கொண்டார்கள். ஆனால், இதையெல்லாம் பார்த்து பார்வதிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் மீனா பைனான்சியரிடம் பணம் கேட்கப் போனார். ஆனால், அவர் பணம் இல்லை என்று சொன்னார். இதனால் வேதனையில் மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்கு அவர், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் காரில் வந்த முத்துவை நிறுத்திய அருண், குடித்திருக்கிறாயா? ஊது என்று சொன்னார். முத்து, குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் விடவில்லை.

சிறகடிக்க ஆசை:

முத்து குடிக்கவில்லை என்று சொல்லியுமே அருண் கேட்கவில்லை. ஊதிதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். பின் அங்கிருந்த போலீஸ், முத்து இடம் விசாரித்துவிட்டு ஊதிவிட்டு செல் என்று சொன்னார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அம்மா வீட்டில் புதிய ஆர்டரை பற்றி சொன்னார். உடனே சீதா, என்னிடம் பணம் இருக்கிறது. நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று தன்னுடைய அக்காவிற்கு நம்பிக்கை கொடுத்தார். மேலும், கோபத்தில் முத்து நன்றாக நிறைய குடித்துவிட்டு செல்வத்தை வரவைத்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

நான் ஓட்டினால் தான் பிரச்சனை. நீ ஒட்டிக்கொண்டு போ, அந்த போலீசை வெறுப்பேத்தியே ஆகணும் என்று சொன்னார். பின் அருண் இருக்கும் இடத்திற்கு வந்த முத்து, நான் நன்றாக குடித்து இருக்கிறேன். ஆனால், நான் வண்டி ஓட்டவில்லை என்று ரொம்பவே கிண்டலாக பேசி இருந்தார். அருணுக்கு அதிகமாக கோபம் வந்தது. பின் அங்கிருந்த போலீஸ் அருணை சமாதானம் செய்து முத்து, செல்வத்தையும் திட்டி அனுப்பி விட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த முத்து குடித்திருப்பதை தெரிந்து மீனா கோபப்பட்டார். முத்து நடந்ததை சொல்ல மீனாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அருண் இடம் சீதா தன் அக்காவுக்காக பண உதவி கேட்கிறார். அருணுமே மறுப்பு தெரிவிக்காமல் உதவி செய்ய ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து குடித்திருந்ததால் மீனா கோபப்பட்டு பேசாமல் இருக்கிறார். ரவி, முத்துவிற்கு அட்வைஸ் செய்கிறார். இருந்துமே முத்து கேட்டுக் கொள்ளவில்லை. பின் மீனா, சீதாவை பார்க்க கிளம்பி வருகிறார். அப்போது சீதா, பணம் ரெடி பண்ண விஷயத்தை சொல்லி தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து விடுகிறார். இதனால் மீனா ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் ஹோட்டலில் சுருதி வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு வந்த ரெண்டு நபர்கள் ரொம்ப மோசமாக ஸ்ருதியிடம் பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபப்பட்ட ஸ்ருதி அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மிளகாய் பொடியை போட்டுக் கொடுத்து விடுகிறார். அவர்கள் சாப்பிட்ட உடன் ஹோட்டலையும் சுருதியையும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த நீத்து, ரவி இருவருமே என்ன நடந்தது? என்று விசாரிக்காமல் சுருதியை தான் திட்டுகிறார்கள். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வந்து வருகிறது . இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் உடல்நிலை முடியாமல் அவஸ்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை அறிந்த ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து உதவி செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full