செல்வத்தால் அருணின் அம்மாவிற்கு நேர்ந்த விபரீதம், பழிக்கு ஆளான முத்து - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 2/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். வக்கீல், இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அவருடன் நெருங்கி பழக வேண்டாம். அது தான் தேவை என்றார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இருவரும் நீத்து, ரெஸ்டாரன்ட்க்கு சென்று பேசி இருந்தார்கள். நீத்து, நான் ரவியை காதலிப்பேன் என்றார். முத்து, இனி நீ சுருதி- ரவி வாழ்க்கையில் தலையிட்டால் நீயும் உன் கடையும் இருக்க மாட்டாய் என்று மிரட்டி விட்டு வந்தார். அதற்குப்பின் ஷோரூமிற்கு ரோகினி மார்டன் உடையில் கவர்ச்சியாக வந்திருந்தார். இதை பார்த்த மனோஜ் கண்டுகொள்ளாமல் இருக்க முயற்சி செய்தார்.

மர்ம நபர்கள் நீத்துவின் கடைக்கு தீவைத்து எரித்து விட்டார்கள். அதோடு நீத்துவின் வீட்டுக்கு சென்று அவருடைய காலையும் உடைத்து விட்டார்கள். யார் செய்தது என்று தெரியவில்லை. அதற்கு பின் நீத்து ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை அறிந்த ரவி அங்கு சென்றார். அப்போது நீத்து, முத்து தான் இதை செய்தது என்றார். ரவியால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் முத்துமிரட்டி போன விஷயத்தை நீத்து சொல்வதால் ரவி நம்பி விட்டார். அப்போது அங்கு வந்த போலீஸிடம் நீத்து, இது தற்செயலாக நடந்த விபத்து என்று சொல்லி ரவி இடம் நல்ல பெயரை வாங்குவதற்காக முத்துவை காப்பாற்றினார்.

சிறகடிக்க ஆசை:

பின் வீட்டிற்கு வந்த ரவி, முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். வீட்டில் உள்ள எல்லோருமே ரவியை தடுத்தார்கள். இருந்தாலும் கோபத்தில் ரவி, முத்துவை திட்டி நடந்தது எல்லாம் சொன்னார். முத்து, நான் எதுவும் செய்யவில்லை என்றார். இருந்தாலும் ரவி கேட்கவில்லை. அண்ணாமலை, மீனா இருவரும் முத்துவை நம்புகிறார்கள். இதை யார் செய்தது? என்று கண்டுபிடிக்கணும் முத்து-மீனா இருவரும் பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் தனக்கு கிடைத்த புது ஆர்டரை ரோகினி, மனோஜிடம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியை சந்தித்த மீனா, நீத்வுக்கு நடந்ததை எல்லாம் சொல்கிறார். ஸ்ருதியின் அப்பா, அம்மா இருவரும் முத்து தான் இதை செய்திருப்பான் என்கிறார்கள். மீனா, அதெல்லாம் இல்லை. யாரோ செய்த வேலை என் கணவர் மீது பழி வந்து விட்டது என்று சொல்கிறார். சுருதியும் மீனா சொல்வதை நம்புகிறார். இன்னொரு பக்கம் முத்து, செல்வம் இந்த வேலையை செய்திருப்பானா? என்று விசாரிக்கிறார். இதனால் செல்வம் கோபப்பட்டு முத்துவிடம் சண்டைக்கு போகிறார். செல்வம், நீதான் இதெல்லாம் செய்வாய் என்று சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி செல்வம் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின்வரும் வழியில் அருணின் அம்மா மீது செல்வம் காரை மோதி விடுகிறார். அருணின் அம்மா இறந்து விடுகிறார். இதை மீனா பார்த்துவிட்டு பதறிப் போய் கத்துகிறார். அங்கிருந்தவர்கள் செல்வத்தை அடிக்கிறார்கள். பின் மீனா, முத்து- சீதாவிற்கு நடந்ததை சொல்கிறார். பின் அருணின் வீட்டில் எல்லோருமே இரங்கலை தெரிவித்து செல்கிறார்கள். அருண் தன் அம்மா இருந்த சோகத்தில் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து வருகிறார். கோபத்தில் அருண், முத்துவை திட்டி வெளியே தள்ளுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full