திருமணத்திற்கு அருண் போட்ட கண்டிஷன், முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 2/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஸ்ருதி அம்மாவிடம் பணத்தை வாங்கி வந்து விஜயாவிடம் கொடுத்து விட்டார். அப்போ விஜயா, இந்த பணத்தை யாரிடம் வாங்கினாய்? எனக்கு தெரிந்தவர்களிடம் வாங்கினாயா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு ரோகினி, நான் வித்யாவிடம் தான் வாங்கினேன் என்று பொய் சொன்னார். பின் பணத்தை வாங்கிக் கொண்டு விஜயா வழக்கம் போல் ரோகினியை திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் கோயிலில் மீனா-சீதா பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, அவர் மனதில் எதையுமே வைத்துக் கொள்ள மாட்டார். அவரிடம் உண்மையை மறைத்து இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். உடனே சீதா, நானே உண்மையை சொல்லி விடுகிறேன் என்றார்.

அதற்கு மீனா, நேரம் வரும்போது சொல்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, உயிருக்கு போராடி இருந்து காப்பாற்றிய பெண்ணை அவர் காதலித்தவரையே வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள். அந்த வீட்டிற்கு முத்து போய் இருந்தார். முத்து காலில் விழுந்து மணமகள்கள் ஆசிர்வாதம் வாங்கினார்கள். அப்போது அவர் கண்ணுக்கு சீதா- அருண் போலவே தெரிகிறது. இதனால் முத்து மனம் தடுமாறி இருந்தார். அந்த சமயம் பார்த்து அருணின் அம்மா முத்துவிடம் பேச வந்தார். முத்துவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இதனால் முத்து செல்வத்திடம் புலம்பி கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அண்ணாமலையிடம் மீனா, சீதா- அருண் காதலுக்கு முத்து ஒத்துக் கொள்ள மறுத்தார். என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. சீதாவின் நிலைமை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அண்ணாமலை, நான் முத்துமிடம் பேசுகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். இதை எல்லாம் கேட்ட விஜயா, வழக்கம்போல் மீனாவையும், மீனா குடும்பத்தையும் ரொம்ப ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார். உடனே அண்ணாமலை, விஜயாவை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது முத்து, நீ கேட்ட மாதிரி அரசாங்க வேலை, வீட்டிற்கு ஒரே பையன் பார்த்துவிட்டேன். வீட்டிற்கு வர சொல்லட்டுமா? என்று கேட்டவுடன் சீதா ரொம்பவே பதறி இருந்தார். உடனே முத்து, நீ ஆசைப்பட்ட அருணையே திருமணம் செய்து கொள். அருணை பெண்பார்க்க வீட்டிற்கு வர சொல் என்று சொன்னார். இதை கேட்டவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். சீதாவிற்கு தலைகால் புரியாமல் குதித்தார். பின் வீட்டிற்கு வந்த முத்து, சீதா- அருண் காதலுக்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். இதை கேட்டவுடன் மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். இதை கேட்டவுடன் விஜயாவிற்கு வயிறு எரிந்தது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, சீதா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் வருவதால் வீட்டில் எல்லோரையும் மீனா-முத்து அழைக்கிறார். ஆனால் வழக்கம் போல் விஜயா, மீனாவை கிண்டல் அடித்து விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி, ஷோரூமில் இருக்கிறார். அப்போது அங்கு வந்த மேனேஜர், பணம் கேட்டு மிரட்டுகிறார். ரோகினிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. அதற்கு மேனேஜர், 10 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் நான் முத்துவிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் சீதாவின் வீட்டிற்கு அருண் வீட்டில் இருந்து வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

சீதா- அருண் இரு வீட்டிலுமே திருமணத்தை பற்றி பேசிக்கொள்கிறார்கள். அப்போது அருண், எனக்கு எந்த வரதட்சணையும் வேண்டாம். ஆனால், எனக்கு ஒரு கண்டிஷன் மட்டும் தான். திருமணத்திற்கு என் உடன் வேலை செய்பவர்கள், உயர் அதிகாரிகள் எல்லோருமே வருவார்கள். அப்போது யாரும் குடித்துவிட்டு அமர்க்களம் செய்யக்கூடாது என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. பின் முத்து, பத்திரிக்கை கொடுக்கும்போது குடிக்க கூடாது என்று சொல்ல முடியுமா? என்கிறார். உடனே அண்ணாமலை, அந்த மாதிரி எந்த பிரச்சினையும் வராது. பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்கிறார். அதற்கு பின் நல்லபடியாக அருண்- சீதா திருமண பேச்சு வார்த்தைகள் முடிந்து விடுகிறது.
இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full