முத்துவை பழிவாங்க அருண் செய்யும் வேலை, ரவி எடுத்த முடிவு - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 9/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் வீட்டிற்கு சென்ற மீனா, உங்களுக்கும் என் கணவருக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. இது எதார்த்தமாக நடந்த விபத்திற்கு என் கணவர் காரணம் இல்ல. சீதாவுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த விவாகரத்து சீக்கிரமாக கிடைக்காது. வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்றார். முத்து- மீனா இருவரும் ரோகிணி ரொம்ப புத்திசாலி. எது வேண்டுமானாலும் செய்வார் என்றார்கள்.

முத்து-மீனா இருவரும் வித்யா, முருகனை சந்தித்து ரோகினி விவாகரத்து விஷயமாக பேசி இருந்தார்கள். வித்யா, நான் கோர்ட்டில் சாட்சி சொல்ல தயார் என்றார். அதற்குப்பின் மலேசியா மாமாவாக நடிக்க வந்த மணியை சந்தித்து முத்து-மீனா பேசி இருந்தார்கள். மணி உண்மையை சொல்ல வருகிறேன் என்று ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து கோர்ட்டில் ரோகினி பற்றி பொய் சொல்ல சொன்னார். பார்வதி முடியாது என்கிறார். சிந்தாமணியிடம் விஜயா உதவி கேட்டார். சிந்தாமணியும் என்னால் முடியாது என்றார்.

சிறகடிக்க ஆசை:

அதோடு சிந்தாமணி, விஜயா பேசும் விஷயத்தை எல்லாம் ரோகிணிக்கு போன் செய்து கேட்க வைத்தார். இதை அறிந்த ரோகினி உஷாராகி விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு சென்ற ரவி மன்னிப்பு கேட்டுவிட்டு வேலை செய்ய ஒத்துக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் நீத்துவுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை உன் அப்பாவிடம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் சொன்றார். கோபத்தில் ஸ்ருதி, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றார். ரவி, நீ அதை செய்தால் நான் வேலைக்கு வருகிறேன் என்றார். உடனே ஸ்ருதி, உனக்கும் நீத்துவுக்கும் சம்மந்தமில்லை என்று சோசியல் மீடியாவில் பேசி வீடியோ போடு என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, சுருதிக்கு அட்வைஸ் செய்து ரவியை வேலையில் சேர்த்துக்கொள்ள சொல்கிறார். பின் ஸ்ருதி, ரவையை வேலை செய்து கொள்கிறார். ஆனால்,நீத்து ரவியை காதலிக்கவில்லை என்று வீடியோ போடும் வரை தன் அம்மா வீட்டில் இருப்பதாக சொல்லி விடுகிறார். இதைப் பற்றி ரவி வீட்டில் சொல்கிறார். இன்னொரு பக்கம் பின் முத்து, செல்வத்தை எப்படியோ ஜாமினில் வெளியே எடுத்து விடுகிறார். செல்வம் தன்னுடைய குடும்பத்தை பார்த்து ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். அந்த சமயம் வந்த அருண், எப்படியோ ஜாமினில் வந்து விட்டாய்.

சீரியல் ட்ராக்:

உன்னுடைய லைசன்சை கேன்சல் செய்து வேலை செய்ய விட மாட்டேன் என்று சவால் விடுகிறார். செல்வம் மன்னிப்பு கேட்டும் அருண் மனம் இறங்கவில்லை. முத்துவை பழி வாங்குவதாக நினைத்து செல்வத்தை
பழி வாங்குகிறார். அதற்குப்பின் கோர்ட்டில் மனோஜ்- ரோகினி விவாகரத்து கேஸ் நடக்கிறது. கோர்ட்டுக்கு வந்த ரோகிணி நக்கலாக விஜயா விடம் நலம் விசாரித்துவிட்டு மனோஜிடம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full