முத்துவை பழிவாங்க அருண் செய்த சதி வேலை, அசிங்கப்படுத்திய ஸ்ருதி அம்மா - சிறகடிக்க ஆசை

By subhashini · 13/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டி, நான் முத்து காரின் பிரேக் ஒயரை கட் செய்து விட்டேன். அந்த கார் ஆயுள் முழுவதும் வெளியே வந்து விடும். நீங்கள் இருவரும் முத்துவின் கார் பக்கத்தில் சென்று உரசினால் போதும் வண்டி ஆக்சிடென்ட் ஆகி முத்து இறந்து விடுவான் என்று சொன்னார். இதனால் முத்து வண்டி எடுக்கிறானா? இல்லையா? என்று சிட்டி ஆட்கள் பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் சுருதி, முதன் முதலாக எல்லோருக்காகவும் உப்புமா சமைத்தார். இதனால் என்ன நடக்குமோ? என்று வீட்டில் உள்ளவர்கள் பயப்பட்டார்கள்.

சமைத்து முடித்த சுருதி, எல்லோருக்குமே பரிமாறி இருந்தார். சுருதி சமைத்த சாப்பாடு தட்டிலே விழவில்லை. தட்டி தட்டி சாப்பாடு போட்டார் சுருதி. அதோடு யாராலும் அந்த உப்புமாவை சாப்பிட முடியவில்லை. இருந்தாலுமே ஸ்ருதி ஆசையாக சமைத்ததால் நன்றாக இருந்தது என்று பாராட்டி இருந்தார்கள். பின் சுருதி, தான் சமைத்ததை சாப்பிட்டு பார்த்து. நன்றாக இல்லை என்கிறார். இருந்தாலும் அண்ணாமலை சப்போராட்டாக பேசியதற்கு சுருதி சந்தோசப்பட்டார்கள். அதற்கு பின் முத்து, சவாரிக்கு கிளம்பும்போது காரின் மீது முட்டை சைக்கிள் மோதி விட்டது.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் காரின் மீது இருந்த உடைந்த முட்டையை எல்லாம் மீனா,முத்து, ரவி மூவருமே சேர்ந்து சுத்தம் செய்தார்கள். அதற்குப்பின் முத்து சவாரிக்கு கிளம்பினார். அப்போது கார் சாவி வீட்டில் இல்லை என்று மொத்த குடும்பமும் தேடி இருந்தார்கள். அப்போது ,சாவி ரவிடம் தான் இருந்தது. பின் ரவி சாவியை கொண்டு வந்து முத்துவிடம் கொடுத்துவிட்டு சென்றார். அதற்குப் பின் முத்து சவாரிக்கு கிளம்பி இருந்தார். அப்போது கார் பிரேக் பிடிக்கவில்லை என்பது முத்துவுக்கு தெரிந்தது. முத்து என்ன செய்வது என்று புரியாமல் பதறி போனார்.

நேற்று எபிசோட்:

கார் எதிரியிலேயே குழந்தைகள் பஸ், பெரியவர்கள் என எல்லோருமே வந்து கொண்டிருந்தார்கள். எப்படியோ தடுமாறி தடுமாறி முத்து வந்தார். ஒரு கட்டத்தில் முத்து ஒரு பைக்கின் மீது மோதி வண்டியை நிறுத்தி விட்டார். ஆனால், அந்த வண்டி அருண் உடையது. பின் கோபத்தில் அருண், வேண்டும் என்றே நீ என்னை இடிக்கத்தான் இப்படி செய்தாயோ என்று முத்துவை கைது செய்தார். முத்து எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே அங்கிருந்த போலீஸ் யாருமே கேட்கவில்லை. இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை பார்த்து பேசி இருந்தார். ஆனால் மனோஜ், தன் அம்மாவிற்கு பயந்து பேச தயங்கி இருந்தார். ரோகினி எடுத்து சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அதிகாரிகள் முத்து உடைய லைசென்சை கேன்சல் செய்ய முடிவெடுக்கிறார்கள். முத்து எவ்வளவு சொல்லியுமே அங்கு இருக்கும் போலீஸ் கேட்கவில்லை. இதனால் அருண் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா தான் எடுத்த வீடியோவை முத்து குடும்பத்திற்கு அனுப்பி விடுகிறார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆகி இருக்கிறார்கள். வழக்கம் போல் ரோகினி, மனோஜ், விஜயா எல்லோருமே முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் உண்மை அறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனாவிடம் முத்து உண்மையை சொல்கிறார். இருவருமே போலீஸிடம் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. அதனால் முத்து-மீனா கிளம்பி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் முத்து காரை எடுத்து வந்த போலீஸ் அதிகாரிக்கு அடிப்பட்டு விடுகிறது. அப்போது அவர், முத்து சொன்னது உண்மைதான். அந்த காரில் பிரேக் இல்லை. மெக்கானிக்கல் தான் சரி செய்தார் என்று சொல்கிறார். உடனே அருண், இந்த உண்மையை சொல்ல வேண்டாம். அவன் ரொம்ப திமிர் பிடித்தவன். அவன் ஆறு மாதம் லைசன்ஸ் இல்லாமல் இருக்கட்டும் என்று முத்துவை பழிவாங்க நினைக்கிறார்.
கடைசியில் வீட்டிற்கு வந்த முத்து,மீனாவை பார்த்து ஸ்ருதியின் அம்மா ரொம்ப மோசமாக பேசுகிறார். அதற்கு விஜயாவும் சப்போர்ட் செய்கிறார். உண்மை என்னவென்று தெரியாமல் ஸ்ருதியின் அம்மா முத்துவையும், அவர் குடும்பத்தையுமே தரைகுறைவாக பேசுகிறார். இதனால் மீனா கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full