சிந்தாமணியிடம் ஏமாந்து போன விஜயா, சமரசம் பேச போன இடத்தில் வெடித்த கலவரம் - சிறகடிக்க ஆசை

By subhashini · 14/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜ் கடைக்கு சென்றார். அங்கு விஜயா, பத்திரத்தை எடுப்பதற்கு அப்பா கையெழுத்து போட்ட மாதிரி பணத்தை வாங்குவதற்கும் போட்டு விடு. நீ இந்த கடன் தொல்லையிலிருந்து நீங்கி நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார். மனோஜும் தன் அம்மா சொல்வதற்கு ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் ரவி, ஸ்ருதியின் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த நீத்து ஆர்டர் சொன்னார். ரவியும் ஆர்டரை எடுத்துக்கொண்டு இருந்தார். இதை பார்த்து சுருதிக்கு கடுப்பானது.

மனோஜ், பேங்கில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் பண்ணுவதால் நீங்கள் கையெழுத்து ஒன்று போடணும் என்று கேட்டார். அண்ணாமலை, எதற்கு? ஏன்? என்றெல்லாம் கேட்டார். மனோஜ், விஜயா இருவரும் ஏதேதோ சொல்லி சமாளித்தார்கள். முத்துவும் திருப்பி திருப்பி கேள்வி கேட்பதால் மனோஜ் பதிலளித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை கையெழுத்து போட வரும் போது மீனா தும்பி விட்டார். இருந்தாலும் மனோஜ், விஜயா இருவரும் அண்ணாமலையை கையெழுத்து போட வைத்து விட்டார்கள். பின் ரூமில் மனோஜ், அண்ணாமலை கையெழுத்து போட்ட பேப்பரை வைத்துக்கொண்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் கிரிஷ்க்கு உடம்பு சரியில்லாததால் ரோகினி, சிந்தாமணியிடம் உதவி கேட்டார். சிந்தாமணி டாக்டரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அதற்கு பின் சிந்தாமணி, உன் மாமியார் மனோஜ்க்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏதாவது செய்து மனோஜை உன் பக்கம் கொண்டுவர பார் என்றெல்லாம் ஏத்தி விட்டார். ரோகிணியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, அருனிடம் பேசுவதற்கு செல்வம் என்னை அழைக்கிறான். நான் போய் பார்த்து பேசுகிறேன் என்றார். மீனா, பிரச்சனை பெரிசாகும் வேண்டாம் என்றார். இருந்தாலும் முத்து கேட்கவில்லை. பின் இதைப்பற்றி மீனா, சீதாவிடம் சொன்னார். சீதா, பயமாக இருக்கிறது என்று தன் அக்காவிடம் புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் மனோஜ், சிந்தாமணி, விஜயா மூவரும் பைனான்சியர் ஆபீசிக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது விஜயா பத்திரத்தை பினான்சியரிடம் கொடுத்து விடுகிறார். மனோஜ், அண்ணாமலை போலவே கையெழுத்தும் போட்டு விடுகிறார். இது எல்லாம் பார்த்து பைனான்சியர், விஜயா இருவரும் உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். பின் விஜயா, மனோஜ் பைனான்ஸ் ஆபீஸ் விட்டு வெளியே வருவதை மீனா பார்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் நீத்து, ரவிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்லி டார்ச்சர் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

ரவி முடியாது என்று சொன்ன சொல்லியுமே நீத்து பிளாக்மெயில் செய்கிறார். வேறு வழி இல்லாமல் ரவி கிளம்பி நீத்துவின் வீட்டிற்கு போகிறார். அதற்குப்பின் அருண், முத்து உடைய இரு வக்கீல்களும் சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்கள். பின் செல்வம் தரப்பில், அருணின் அம்மா கவன குறைவால் தான் விபத்து நடந்தது என்று போலீஸ் சொன்னார் என்கிறார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று வக்கீல் சொல்கிறார். செல்வம் ஒரு லட்சம் தருகிறேன் என்று சொல்கிறார். கோபப்பட்ட அருண், முத்துவின் அப்பா மீது கார் ஏத்தி விட்டு சமாதானம் பேசலாம் என்று சொல்வதால் சண்டை நடக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full