பெண்கள் இல்லாமல் வீட்டு வேலை செய்ய அடித்து கொள்ளும் ப்ரதரஸ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 8/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நீங்கள் எப்படி வீட்டில் தனியாக இருப்பீர்கள் என்று தன்னுடைய தந்தைக்கு துணையாக இருக்கிறார். ரவியும் முத்துவுடன் இருக்கிறார். அதற்குப்பின் மனோஜ், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே தங்கி விட்டார். நான்கு ஆண்களுமே சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் பற்றி விசாரித்து வையுங்கள் என்றார்.

அண்ணாமலை வீட்டில் தனியாக இருப்பதால் முத்து, முருகன் சொன்ன சவாரிக்கு போக வேண்டாம் என்று முடிவு எடுத்து செல்வத்தை அனுப்பி வைத்தார். ஆனால் செல்வம், நாளை எனக்கு வேறு ஒரு சவாரி இருக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் தான் போவேன் என்று சொல்வதால் முத்தவும் ஒத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து சவாரிக்கு யார் சென்றிருந்தார்கள் என்று விசாரிக்க சொன்னார். அப்போது லட்சுமி, முத்துவின் நண்பர் செல்வம் தான் சென்றிருக்கிறார் என்று சொன்னவுடன் ரோகினி சந்தோசப்பட்டார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் சத்யா, தான் வேலை செய்யும் முதலாளி, ரேகா மூவரும் சேர்ந்து ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தன்னுடைய பெண்ணை பார்ப்பதற்கு சிந்தாமணி ஹோட்டலுக்கு வந்தார். மீனா வேண்டாம் என்று சொன்ன அந்த ஆர்டரை சிந்தாமணியிடம் செய்ய சொல்லி கேட்டார்கள். கோபத்தில் சிந்தாமணி, அவள் கேன்சல் செய்த ஆர்டரை என்னால் செய்ய முடியாது என்றார். இன்னொரு பக்கம் ஆண்கள் சமைத்தார்கள். அந்த சமயம் வந்த அண்ணாமலையின் உறவினர்கள் வந்து விடுவதால் சமைத்த சாப்பாட்டை எல்லாம் அவர்களுக்கு கொடுத்து விட்டார்கள். இதை பார்த்து மனோஜ்க்கு பயங்கர கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை வீட்டு வேலை செய்யப் போகிறார். உடனே முத்து, அண்ணாமலையை உட்கார வைத்து நாங்கள் மூன்று பேரும் செய்கிறோம் என்று சொல்கிறார். மனோஜ், என்னால் வேலை செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்கிறார். இதனால் முத்து- மனோஜ் இடையே சண்டை நடக்கிறது. இதை பார்த்து ரவி, நானே எல்லா வேலையும் செய்து கொள்கிறேன் என்கிறார். அதற்கு முத்து, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்றார். வேறு வழி இல்லாமல் மனோஜ் வேலை செய்ய ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் மனோஜ், முத்து, ரவி வீட்டின் மொத்த வேலையும் முடித்து விடுகிறார்கள். பின் வீட்டு வேலை செய்ததால் உடம்பு அசதியாக இருப்பதால் சரக்கு அடிக்கலாம் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே லக்ஷ்மிக்கு ஃபோன் செய்து கிரிஷை ர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் லட்சுமி முடியாது என்று போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த அண்ணாமலை, குடும்பத்தை பற்றியும் மனைவியின் முக்கியத்துவத்தை பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full