விஜயாவின் கேவலமான புத்தியால் கிரிஷை கடத்திய சிந்தாமணி, காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை

By subhashini · 4/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஐடியா நன்றாக இருக்கிறது. நான் கிரிஷ் உடைய அம்மா இறந்து விட்டார்ன்னு சொல்கிறேன் என்றார். மீனா, ரோகிணியை பார்த்து முறைத்தார். இன்னொரு பக்கம் சுருதியை வெறுப்பேற்றுவதற்காக நீத்து ரவியை அழைத்துக் கொண்டு சுருதி ரெஸ்டாரண்டுக்கு போனார்கள். அப்போது நீத்து, ரவியை கட்டிப்பிடித்து உங்களால்தான் காம்பெடிஷனில் செலக்ட் ஆகி இருக்கிறேன். ரொம்ப நன்றி என்றெல்லாம் சுருதியை வெறுப்பேற்றும்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால், ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

நீத்து,சுருதியை வெறுப்பேற்றுவதற்காகவே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அதை பெரிதாக சுருதி எடுத்துக் கொள்ளவில்லை. ரவிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு லட்சுமி, முத்துவின் வீட்டிற்கு வந்தார். ரோகினி உள்ளுக்குள் பயந்து கொண்டுதான் இருந்தார். பின் லட்சுமி, என்னுடைய மகள் இறந்து விட்டார். க்ரிஷ், முத்துவுடன் இருக்க ஆசைப்படுகிறான் என்று சொல்லி எமோஷனலாக கதைகளை சொன்னார். இதை எல்லாம் கேட்டு மீனாவிற்கு ரோகிணி மீதுதான் கோபம் அதிகமானது.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை, முத்து எல்லோரும் கிரிஸை வீட்டில் தங்குவதற்கு ஒத்துக்கொண்டார்கள். வழக்கம் போல மனோஜ்- வித்யா தான் வேண்டாம் என்று சண்டை போட்டார்கள். பின் அண்ணாமலை, கிரிஷை அங்கேயே தங்க வைத்தார். அதற்குப்பின் விஜயா, கிரிஷை இங்கிருந்து எப்படியாவது அனுப்பி விடணும் என்று ரோகிணியிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பார்வதி- சிவன் இருவரும் சேர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லி வீடியோ எடுத்து போட்டார்கள். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டிற்கு சிந்தாமணி, ரோகினி, விஜயா எல்லோருமே வந்துவிடுகிறார்கள். அப்போது விஜயா, கிரிஸை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும். என்ன செய்வது? என்று கேட்கிறார். உடனே பார்வதி, இந்த பாவம் செயலை செய்வதற்கு மீட்டிங்கா? என்னால் முடியாது என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்கு சிந்தாமணி, அந்த பையனுக்கு சூடு போடுங்கள். அவன் வீட்டை விட்டு போய் விடுவான் என்று சொல்கிறார். உடனே ரோகினி, அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார். பின் சிந்தாமணி, என்னுடைய ஆட்களை வைத்து அந்த பையனை கடத்தி ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறேன்.

சீரியல் ட்ராக்:

அவன் உங்கள் வீட்டுக்கே வரமாட்டான் என்று சொல்கிறார். இதைக்கேட்டு ரோகினி ஷாக் ஆகிறார். விஜயா, நல்ல ஐடியா என்று சொல்கிறார். பின் ரோகிணி, மீனாவிற்கு போன் செய்து கிரிஸை கடத்தும் விஷயத்தை பற்றி சொல்கிறார். பதறி போன மீனா, கிரிஷை அழைப்பதற்காக போக சொல்கிறார். அதற்குள்ளே சிந்தாமணி, தன்னுடைய ஆட்களை வைத்து கிரிஷை கடத்தி விடுகிறார். கிரிஷை கடத்திக் கொண்டு போகும் வண்டியை முத்து பார்த்துவிட்டு பின் தொடர்ந்து செல்கிறார். பின் இந்த விஷயத்தை பற்றி முத்து, மீனாவிடம் சொல்கிறார். இதைப் பற்றி மீனா சொன்ன உடன் ரோகிணி ரொம்பவே பதறி அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full