சிந்தாமணி எடுத்த விஸ்வரூபம், முத்து விட்ட சவால் - பரபரப்பில் சிறகடிக்க ஆசை

சிந்தாமணி எடுத்த விஸ்வரூபம், முத்து விட்ட சவால்

By subhashini · 21/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வர வைத்திருந்தார்கள். போலீஸ், ஹாஸ்பிடல் சிசிடிவி கேமராக்களை செக் செய்தார்கள். அதில் முத்து, மீனா, சத்யா மூவரும் தான் ரேகாவை கடத்திருக்கிறார்கள் என்று சிந்தாமணி சொன்னார். சிந்தாமணியின் வாக்கு மூலத்தை வைத்து போலீஸ் முத்து-மீனாவை அரெஸ்ட் பண்ணுவதாக சொன்னார்கள். உடனே சிந்தாமணி, நீங்கள் முத்துவை மட்டும் அரெஸ்ட் பண்ணுங்கள். அந்த மீனா என் வழிக்கு தானாக வருவாள் என்றார். அந்த சமயம் பார்த்து ரேகா வீடியோ ஒன்று வருகிறது.

அதில் ரேகா, என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விருப்பப்பட்டு தான் வந்தேன். அதையும் மீறி போலீசில் புகார் கொடுத்திருந்த கொடுத்தால் நான் என்னுடைய அப்பா அம்மாவிற்கு எதிராகவே சாட்சி சொல்வேன் என்றார். இதை கேட்டவுடன் போலிஸ் எதுவும் பேசாமல் அங்கு இருந்து சென்றார்கள். சிந்தாமணி, தன்மகள் தனக்கு எதிராக திரும்பியது நினைத்து கொந்தளிக்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து விவாகரத்து விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது ரோகினி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ் சொன்னார். ரோகினிக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்துக்கு சம்மதமா? அவர்கள் பணத்தை தந்துவிடுவார்கள் என்றார். ரோகினி மனதில் ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு பணம் தந்தால் விவாகரத்து தருகிறேன் என்றார்.

சிறகடிக்க ஆசை:

ரோகினி, பணத்தை கொடுத்து விட்டால் நான் டைவர்ஸ் கொடுத்து விடுவேன் என்றார். வக்கீலும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின் வக்கீல், மனோஜிடம் பணத்தை ரெடி பண்ண சொன்னார். மனோஜ், நான் எங்கே போவேன் என்றார். வக்கீல், உன் தம்பியே 38 லட்சம் ரெடி பண்ணி வீட்டை அமைக்கும் போது நீ ரெடி பண்ண மாட்டாயா? எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி இந்த கேஸை முடித்து விடலாம் என்றார். அதற்குப்பின் மீனாவின் அம்மா சந்திரா போன் செய்து, வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்றார்.

சீரியல் ட்ராக்:

மீனா, தன்னுடைய அம்மாவிற்கு தைரியப்படுத்தினார். முத்து-மீனா இருவருமே சேர்ந்து சந்திராவை பார்வதியின் வீட்டில் கொஞ்ச நாட்களுக்கு தங்க வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். மறுநாள் காலையில் சீக்கிரமாகவே மீனா, பார்வதியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி தன்னுடைய அம்மாவை தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டார். பார்வதி, சத்யா-ரேகா கல்யாணம் நடக்கும் வரை உன் அம்மா என் வீட்டிலேயே தங்கி கொள்ளட்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அதற்குப்பின் மீனா கிளம்பி போனார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு போன் செய்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அண்ணாமலை, சந்திரா எல்லாருமே போன் செய்தார்கள். ஆனால், மீனா போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து கொண்டு முத்து எல்லா இடங்களிலும் தேடினார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரேகா கிடைக்காததால் சிந்தாமணி தன்னுடைய அடியாட்களை அழைத்துக் கொண்டு முத்துவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அடியாட்கள் முத்துவின் குடும்பத்தை தாக்குகிறார்கள். விஜயா, நீ உன் மகள் ஓடிப்போனதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கத்துகிறார். சிந்தாமணி, என் மகள் வேண்டும் என்று சொல்கிறார். முத்து, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்து வைப்பேன் என்று சொல்கிறார். சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணம் செய்து வைக்கிறாய் பார்க்கிறேன் என்று சவால் விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full