மீனா-முத்துவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணிக்கு ரேகா வைத்த ஆப்பு - சிறகடிக்க ஆசை

மீனா-முத்துவை பழிவாங்க துடிக்கும் சிந்தாமணி

By subhashini · 19/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஹாஸ்பிடலில் சிந்தாமணி அடியாட்களை எல்லாம் முத்து மயக்க மருந்து கொடுத்து மயங்கி கீழே விழ வைத்திருந்தார். அதை பார்த்து ரேகாவின் அப்பா பயங்கரமாக கோபப்பட்டார். ரேகா, சத்யா இருவரையும் முத்து தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தார். பாட்டியிடம் முத்து, ரேகா -சத்யாவின் காதலைப் பற்றியும் அதனால் வந்த பிரச்சனை எல்லாம் சொன்னார். பாட்டி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள் என்றார்.

முத்து, சிந்தாமணி ரேகாவை தேட ஆரம்பித்து இருப்பார். அவர் போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் கொடுப்பதற்குள் நாம் சரியான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்றார். பின் ரேகாவிடம் தன்னை யாரும் கடத்த வில்லை என்று பேசும்படியாக ஒரு வீடியோவை முத்து ரெக்கார்ட் செய்து விட்டார். உடனே பாட்டி, இவர்களை ரொம்ப நாட்களாக மறைத்து வைக்க முடியாது. சீக்கிரமாகவே இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய் என்றார். அதற்கு பின் முத்து-மீனா இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது முத்துவின் வீட்டிற்கு வந்த சிந்தாமணி ருத்ர தாண்டவம் ஆடினார்.

சிறகடிக்க ஆசை:

சிந்தாமணி, மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் வைப்பதாக சொல்லி மிரட்டினார். முத்து, போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடு. உன் மகள் கடத்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். வீட்டில் உள்ள எல்லோருமே முத்து, மீனாவிற்கு சப்போர்ட் செய்து சிந்தாமணியை திட்டி அனுப்பினார்கள். அதற்குப்பின் விஜயா, இது தேவையில்லாத வேலை. ரேகாவை கொண்டு போய் சிந்தாமணியிடம் விடு என்றார். முத்து, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். எந்த பிரச்சினையும் வராது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். வழக்கம் போல மனோஜ், மீனாவின் குடும்பத்தையும் முத்து செய்த வேலையும் விமர்சித்து பேசி இருந்தார். அண்ணாமலை, முத்துவிற்கு தான் சப்போர்ட் செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வர வைத்திருக்கிறார்கள். போலீஸ், ஹாஸ்பிடல் சிசிடிவி கேமராக்களை செக் செய்கிறார்கள். அதில் முத்து, மீனா, சத்யா மூவரும் தான் ரேகாவை கடத்திருக்கிறார்கள் என்று சிந்தாமணி சொல்கிறார். சிந்தாமணியின் வாக்கு மூலத்தை வைத்து போலீஸ் முத்து-மீனாவை அரெஸ்ட் பண்ணுவதாக சொல்கிறார்கள். உடனே சிந்தாமணி, நீங்கள் முத்துவை மட்டும் அரெஸ்ட் பண்ணுங்கள். அந்த மீனா என் வழிக்கு தானாக வருவாள் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து ரேகா வீடியோ ஒன்று வருகிறது.

சீரியல் ட்ராக்:

அதில் ரேகா, என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விருப்பப்பட்டு தான் வந்தேன். அதையும் மீறி போலீசில் புகார் கொடுத்திருந்த கொடுத்தால் நான் என்னுடைய அப்பா அம்மாவிற்கு எதிராகவே சாட்சி சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டவுடன் போலிஸ் எதுவும் பேசாமல் அங்கு இருந்து செல்கிறார்கள். சிந்தாமணி, தன்மகள் தனக்கு எதிராக திரும்பியது நினைத்து கொந்தளிக்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து விவாகரத்து விஷயமாக பேசுகிறார்கள். அப்போது ரோகினி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ் சொல்கிறார். ரோகினிக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்துக்கு சம்மதமா? அவர்கள் பணத்தை தந்துவிடுவார்கள் என்று சொல்கிறார். ரோகினி மனதில் ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு பணம் தந்தால் விவாகரத்து தருகிறேன் என்று சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full