விஜயாவை உஸ்பேத்தும் சிந்தாமணி, மனோஜ் செய்த வேலையால் கோபப்பட்ட ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 21/2/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து வீட்டிற்கு வந்த பவானி அப்பா, பவானிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. மீனா, முத்து இல்லை என்றால் இந்த திருமணம் நடக்காது என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் தான் வந்தது. வழக்கம்போல் அவர் நக்கலாக பேசி இருந்தார். இன்னொரு பக்கம் முத்து, ட்ராபிக் போலீஸ் அருண் செய்த வேலையை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார். இதனால் எஸ் ஐ, அருணை வரவைத்து வார்னிங் கொடுத்து மூன்று நாள் சஸ்பெண்ட் பண்ணி விட்டார்கள். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வந்தது.

பின் அவர், இந்த வேலையை மட்டும் செய்தது யார் என்று தெரிந்தால் சும்மா விடமாட்டேன் என்று பொங்குகிறார். ஆனால், முத்து மீது அருண் சந்தேகப்பட்டார். இன்னொரு பக்கம் வித்யா, தன்னுடைய காதலுக்காக மீனா விடம் ஐடியா கேட்டார் .இதையெல்லாம் பார்த்த ரோகினிக்கு கோபம் வந்தது. அதற்குப் பின் சீதா, அருண் வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவை பற்றி நலம் விசாரித்தார். ஆனால், ஏதோ மன கஷ்டத்தில் அருண் இருக்கிறார் என்று அவர் அம்மா சொல்ல, சீதா விசாரித்தார். ஆனால், அருண் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் அருண், நான் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவசரத்தில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டேன். அதனால் ஒரு பொறுக்கி என்னை பழிவாங்க அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுவிட்டான். அதனால் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என்று சொன்னவுடன் சீதா, அவருக்கு ஆறுதல் சொல்லி அம்மாவுடன் சந்தோசமாக இருங்கள். தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இதனால் அருணுக்கு சீதா மீது ஒரு நல்ல எண்ணம் உருவாகிறது.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம், முத்து அருணுக்கு சஸ்பெண்ட் ஆன விஷயத்தை மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் மீனா, இதெல்லாம் ரொம்ப தப்பு. ஒருவரை பழிவாங்க கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். அதனால் மீனா- முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. இன்னொரு பக்கம் நடன வகுப்பிற்கு வெயிட் மெஷினை காதல் ஜோடி கொண்டு வந்து தந்தார்கள். அப்போது ஒவ்வொருவருமே ஏறி நின்று வெயிட் பார்த்தார்கள். விஜயாவின் வெயிட்டை பார்த்து பார்வதி, சிந்தாமணி இருவருமே கிண்டல் செய்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, வெயிட் மிஷின் காமிக்கவில்லை என்று எல்லோருமே கிண்டல் கேலி செய்து பயங்கரமாக சிரிக்கிறார்கள். இதனால் விஜய்விற்கு கோபம் வருகிறது. இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக சொல்லி விஜயாவை உசுபேத்தி விடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, கடையில் வியபாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது பொருள் வாங்க வந்த பெண்ணை பார்த்து மனோஜ் ஜொள்ளு விடுகிறார். இதெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கோவம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து கிரிஷ் பாட்டி, ரோகினிக்கு போன் செய்து பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதை பற்றி சொல்கிறார். ரோகினியும், நீங்க பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். அதற்குப்பின் மீனாவிற்கு முத்து வண்டி ஓட்டுவதை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது மீனாவின் தோழிகள் அதை பார்த்து பெருமையாக முத்து-மீனாவை பற்றி பேசுகிறார்கள். பின் அவர்களையும் மீனா அழைத்துக் கொண்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full