பணத்தை திருப்பி கேட்ட ரோகினிக்கு சிட்டி கொடுத்த பதிலடி, சீதா திருமணம் தெரிய வருமா? சிறகடிக்க ஆசை

By subhashini · 25/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், பணத்தை எப்படியாவது வாங்கிக் கொண்டு வா. அப்போதான் அம்மா உன் மீது கோபப்பட மாட்டார் என்று சொன்னார். உடனே கோபத்தில் ரோகினி, நீ எப்போதுமே எனக்கு சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று மனோஜ் இடம் சண்டை போட்டார். அதற்கு மனோஜ், நீ செய்த காரியம் அப்படி இருக்கிறது என்று வாக்குவாதம் செய்தார். இன்னொரு பக்கம் சீதா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்யப் போவது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதே போல் மீனாவும் முத்துவிற்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதை நினைத்து வேதனை பட்டு கொண்டிருந்தார்.

மீனா தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கான மாலைகள் தயார் செய்து கிளம்பினார். அப்போது முத்து, எங்கு போகிறாய் என்று கேட்டார். மீனா, தெரிந்தவர் கல்யாணத்திற்கு மாலை கொடுக்கப் போகிறேன் என்று சொன்னார். பின் முத்து, அந்த மாலையை போட்டோ எடுத்துக் கொண்டார். பின் ரெஜிஸ்டர் ஆபீசில் சீதாவை பார்த்து மீனா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். பின் திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் செய்தார்கள். இன்னொரு பக்கம் முருகன் ரெஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லி முத்துவை அழைத்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் ரிஜிஸ்டர் ஆபீசில் சீதா-அருணிற்கு நல்லபடியாக திருமணம் நடந்தது. இன்னொரு பக்கம் அதே ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு முருகனுடன் முத்து வந்தார். அப்போது முருகன், ரெஜிஸ்டர் மேரேஜருக்கு என்னென்ன தேவைகள் என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், உள்ளே மீனா இருக்கும் விஷயம் முத்துவிற்கு தெரியவில்லை. பின் நல்லபடியாக திருமணம் முடிந்து சீதா, மீனா, அருண் மூவரும் வெளியே வந்தார்கள். அந்த சமயம் பார்த்து முத்து வேறொரு ரூமிற்கு சென்று விட்டார். பின் அருண், சீதாவை அனுப்பி விட்டார். பர்ஸ் மறந்து வைத்ததால் மீனா உள்ளே வந்தார். அப்போது முத்துவை பார்த்து மீனா ஷாக் ஆனார்.

நேற்று எபிசோட்:

முத்து, இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மீனா, நான் கல்யாணத்திற்கு மாலை கொடுக்க வந்தேன் என்று சொன்னார். பின் இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா வீட்டில் சத்யா பாஸ் பண்ணதற்காக தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் முத்து. எல்லோருமே முத்துவை பாராட்டி பேசிருந்தார்கள். இதனால் மீனாவின் அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம். அப்போது வந்த முத்து, எல்லோருக்குமே விருந்து போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர், சீக்கிரமாகவே சீதா கல்யாண விருந்து போட வேண்டும் என்று சொன்னார். முத்து, சீக்கிரமாக சீதாவிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு மீனா- சீதா இருவரும் பயப்பட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா அம்மா குடியிருக்கும் வீட்டின் ஓனர், சீதா காதலிக்கும் விஷயமாக முத்து விடம் பேசுகிறார்கள். அப்போது அவர்கள், சீதா காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து வைத்து விடுங்கள். இல்லை என்றால் அவள் வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போகிறாள் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே சீதாவை அழைத்து முத்து பேசுகிறார். ஆனால், சீதாவால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டு கீழே வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, சிட்டியை சந்தித்து போலி நகையை பற்றி பேசுகிறார். உடனே சிட்டி, எனக்குமே தெரியாது. நானும் உங்களை போல தான் ஏமாந்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு ரோகினி, என் பணத்தை கொடுங்கள் என்று கேட்கிறார். சிட்டி, நீங்கள் நகையை கொடுத்தால் பணத்தை தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் இதை பற்றி மனோஜிடம் ரோகினி சொல்கிறார். அதற்கு மனோஜ், பணம் இல்லை என்றால் அம்மா சும்மா விட மாட்டார்கள். தயவுசெய்து ஏதாவது செய். நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று வழக்கம்போல் அம்மா பிள்ளையாக பேசுகிறார். அதனால் ரோகினி கோபம் வந்து மனோஜை திட்டுகிறார். பின் வித்யாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் முருகனுக்கு போன் செய்து ரோகினி பணத்தை கேட்கிறார். அதற்கு அவர், நான் யோசித்து சொல்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full