ஹாஸ்பிடல் செலவால் மோதிக்கொள்ளும் முத்து- மனோஜ், ரவியை அவமானப்படுத்திய சுருதி அம்மா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' மனோஜை துரத்தி வந்த நபர்கள் முத்துவிடம் பணத்தை கேட்க, பின் நடந்ததை விசாரித்த முத்து, எல்லோருக்கும் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார். யாரை துரத்துவதற்காக மனோஜ் ஓடி வந்தான் என்று முத்து-மீனா இருவருமே யோசித்தார்கள். டாக்டர், மனோஜ்க்கு இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. அது முடிந்தவுடன் தான் ரிசல்ட் சொல்ல முடியும் என்று என்றவுடன் ரோகினி இன்னும் ரொம்ப வேதனைப்பட்டார். அதற்குப்பின் எல்லோரும் மனோஜை பார்க்க போனார்கள். மனோஜ் ரொம்ப எமோஷனலாக பேச, எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
அந்த சமயம் பார்த்து போலீஸ், மனோஜை பார்க்க வந்தது. அப்போது மனோஜ், நான் கதிரை துரத்தி போனேன். அப்போதுதான் எதிர்பாராமல் எல்லோர் மேலும் மோதிட்டேன் என்று சொன்னார். பின் டிராபிக் போலீஸ் இடம் முத்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தார். அதற்குப்பின் மனோஜ், எனக்கு இனிமேல் பார்வை வராதா? என்னால் யாரையும் பார்க்க முடியாதா? என்று எமோஷனலாக பேச, ரோகினி அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் 75 ஆயிரம் ரூபாய் பில் கட்ட சொன்னார்கள். என்ன செய்வதென்று புரியாமல் முத்து -மீனா இருவருமே தவித்தார்கள். யாரிடமும் அதைப்பற்றி சொல்லாமல் இருவருமே பணத்தை ரெடி பண்ண பார்த்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
மறுநாள் காலையில் ஹாஸ்பிடலுக்கு போவதற்காக விஜயா, மீனாவை கூப்பிட, அவர் வீட்டில் இல்லை. வழக்கம் போல் மீனாவை திட்டிக் கொண்டிருந்தார் விஜயா. நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, மீனா எல்லா சாப்பாடும் சமைத்து வைத்து இருந்தார். தேவையில்லாமல் அவளை பற்றி தவறாக பேசாதே என்று சொன்னார். உடனே ஸ்ருதி, ரோகினி-மனோஜ் இருவரும் பசியில் இருப்பார்கள் என்று தான் மீனா-முத்து ஹாஸ்பிடல் போய் இருக்கிறார்கள் என்றவுடன் விஜயா அப்படியே அமைதியாகிவிட்டார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். அப்போது டாக்டர், மனோஜ் கட்டை கழட்ட இருப்பதால் ரோகினியை அழைத்தார்கள். பின் டாக்டர், மனோஜின் கட்டை கழட்டி இருந்தார். ஆரம்பத்தில் ரோகிணியின் முகம் சரியாகவே தெரியவில்லை. அதற்குப்பின் ரோகினியை பார்த்தார். நல்லபடியாக மனோஜ்க்கு கண் தெரிந்தது அதற்குப்பின் வெளியே வந்த ரோகினி, எமோஷனலாக ரொம்ப அழுதார். அதை பார்த்தவுடன் எல்லோரும் பயந்து விட்டார்கள். கடைசியில் ரோகினி, மனோஜூக்கு கண் தெரிகிறது, நன்றாக இருக்கிறார் என்றவுடன் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அப்போது மீனா ஆரத்தி எடுக்க வந்தார். உடனே விஜயா, அதை வாங்கி மனோஜிற்கு ஆரத்தி எடுக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி ஹோட்டலில் வேலை செய்வதை பார்த்து அவருடைய அம்மா பயங்கரமாக சண்டை போடுகிறார். முத்து குடும்பத்தையும், ரவியையும் மோசமாக திட்டுகிறார். ஆனால், ஸ்ருதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வந்த ரவியையும் திட்டி விட்டு செல்கிறார். இதனால் சுருதி-ரவி இடையே வாக்குவாதம் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் முத்து, ஹாஸ்பிடலில் மனோஜ்க்கு செய்த செலவு லிஸ்ட்டை அண்ணாமலையிடம் கொடுக்கிறார். அவர், பணத்தை கொடுத்து விடு மனோஜ் என்கிறார். உடனே விஜயா, எதற்காக கொடுக்கனும்? கணக்கு பார்க்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை, முத்து-மீனா இருவரும் கடன் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். உங்களுடைய செலவை நீங்கள் தானே பார்க்கணும் என்று சொன்னவுடன் ரோகினி சம்மதிக்கிறார். ஆனால், மனோஜ்-விஜயா இருவரும் ஏளனமாக பேசுகிறார்கள். இதனால் மீனாவிற்கு கோபம் வருகிறது. கடைசியில் அண்ணாமலை, மனோஜை திட்டுகிறார். விஜயா, மீனாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.