முத்துவை தரக்குறைவாக பேசிய சீதா, கோபத்தில் வெளுத்து வாங்கிய மீனா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் ஒவ்வொரு செயலையும் நாய் மாதிரியே செய்து கொண்டிருந்தார். இதனால் விஜயா ரொம்பவே பயப்பட்டார். அந்த சமயம் பார்த்து நாயை காணவில்லை என்று உரிமையாளர் புலம்பி கொண்டிருந்தால் மனோஜ், நாய் செத்துவிட்டது என்று நினைத்து கொண்டு நானும் செத்து விடுவேன், எனக்கு என்னென்னவோ ஆகிறது என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். உடனே முத்து, உனக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதே அவருக்கு அறிவுரை சொன்னார். அதற்கு பின் ரோகினி, கிரிஷை பார்க்கப் போனார்.
அந்த இடத்தில் மீனா, தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். கிரிஷை பார்த்த மீனா, கத்திக்கொண்டே வந்தார். உடனே ரோகினி, கிரிசை வேகமாக காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் டிராபிக் ரூல்ஸ் மீறி சில பேர் வண்டி ஓட்டி வந்ததால் அருண் அவர்களை பின்தொடர்ந்து சென்று சண்டை போட்டார். அந்த வழியாக வந்த முத்து, அருணை காப்பாற்றி அந்த நபர்களை அடித்து விரட்டினார். இதனால் அருணுக்கு தலையில் அடிபட்டது. ஆனால், முத்து தனக்கு உதவி செய்ததற்கு நன்றி கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அருண் சென்று விட்டார். கடைசியில் ரோகினி, கிரிஷ் இடையே வாக்குவாதம் நடந்தது.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகிணி, க்ரிஷ்க்கு எடுத்து சொல்லி புரிய வைத்தார். முத்து, அருணை மூன்று பேர் சேர்ந்து அடித்த விஷயத்தை பற்றி மீனாவிடம் சொன்னார். அதற்கு மீனா, நன்றி கூடவா உங்களிடம் சொல்லவில்லை என்றார். பின் தன்னுடைய கணவர் பெருந்தன்மையாக நடந்து கொள்வதை நினைத்து மீனா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் தலையில் அடிபட்டதை பார்த்து சீதா பயந்து போனார். உடனே அருண், ஒரு மூன்று பேர் விதியை மீறி சென்றதால் நான் அவர்களை பிடித்து கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை தாக்கி விட்டார்கள். நானும் சமாளித்து பார்த்தேன் முடியவில்லை. அந்த பக்கம் வந்த முத்து காப்பற்றினார். ஆனால், முத்து அந்த சமயத்தில் எப்படி வந்தார் தெரியவில்லை.
நேற்று எபிசோட்:
அவர் வைத்த ஆளாகத்தான் அந்த நபர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன உடனே சென்று விட்டார்கள் என்றார். இதையெல்லாம் கேட்டு சீதாவிற்கு முத்து மீது கோபம் வந்தது. பின் சீதா, தன் அக்காவிற்கு போன் செய்தார். இதை பார்த்து உள்ளுக்குள் அருண் சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், மனோஜனின் நண்பர், ரோகினி மூவருமே ஸ்கூலில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்கூலில் எடுத்த போட்டோவை எல்லாம் மனோஜின் தோழர் காண்பிக்க, அதில் கிரிஷ் இருந்த போட்டோவை ரோகிணி எடுத்து கிழித்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மீனா, சீதாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார். அப்போது சீதா, உன்னுடைய புருஷன் தான் ஆள் வைத்து அருணை அடித்திருக்கிறார். எதற்கு இப்படி எல்லாம் செய்யணும் என்று கோபமாக கேட்கிறார். மீனா, அவர் ஒன்றும் செய்யவில்லை. அருண் தான் தவறாக சொல்லி இருக்கிறார் என்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் சீதா, முத்துவை ரவுடி என்று சொல்லி விடுகிறார். அதனால் கோபத்தில் மீனா, சீதாவை அடித்து விடுகிறார். இதனால் கோபப்பட்ட சீதா, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சீரியல் ட்ராக்:
நான் உன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சென்று விடுகிறார். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா ரொம்பவே வருத்தப்படுகிறார். மீனாவுமே சீதாவை அடித்தது நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் சீதாவுமே நடந்த சண்டையை நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் விஜயாவின் யோகா கிளாஸில் சில பேர் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாக விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது புது நபர் யோகா கற்றுக்கொள்ள வருகிறார். அவர் பார்வதிக்கு ரூட் விடுவது போல் தெரிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது