நடுரோட்டிலேயே மோதிக் கொள்ளும் முத்து- அருண், கிரிஷ் ரகசியத்தை அறிந்தாரா அண்ணாமலை? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அருண், நான் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவசரத்தில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டேன். அதனால் ஒரு பொறுக்கி என்னை பழிவாங்க அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுவிட்டான். அதனால் என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என்று சொன்னவுடன் சீதா, அவருக்கு ஆறுதல் சொல்லி அம்மாவுடன் சந்தோசமாக இருங்கள். தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இதனால் அருணுக்கு சீதா மீது ஒரு நல்ல எண்ணம் உருவாகிறது.
இன்னொரு பக்கம், முத்து அருணுக்கு சஸ்பெண்ட் ஆன விஷயத்தை மீனாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் மீனா, இதெல்லாம் ரொம்ப தப்பு. ஒருவரை பழிவாங்க கூடாது என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். அதனால் மீனா- முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதமானது. இன்னொரு பக்கம் நடன வகுப்பிற்கு வெயிட் மெஷினை காதல் ஜோடி கொண்டு வந்து தந்தார்கள். அப்போது ஒவ்வொருவருமே ஏறி நின்று வெயிட் பார்த்தார்கள். விஜயாவின் வெயிட்டை பார்த்து பார்வதி, சிந்தாமணி இருவருமே கிண்டல் செய்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா, வெயிட் மிஷின் காமிக்கவில்லை என்று எல்லோருமே கிண்டல் கேலி செய்து பயங்கரமாக சிரித்தார்கள். இதனால் விஜயாவிற்கு கோபம் வந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக சொல்லி விஜயாவை உசுபேத்தி விட்டார். இன்னொரு பக்கம் ரோகினி, கடையில் வியபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பொருள் வாங்க வந்த பெண்ணை பார்த்து மனோஜ் ஜொள்ளு விட, இதெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கோவம் வந்தது. அந்த சமயம் பார்த்து கிரிஷ் பாட்டி, ரோகினிக்கு போன் செய்து பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருப்பதை பற்றி சொன்னார்.
நேற்று எபிசோட்:
ரோகினியும், நீங்க பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்குப்பின் மீனாவிற்கு முத்து வண்டி ஓட்டுவதை சொல்லிக் கொடுத்திருந்தார். அங்கு வந்த மீனாவின் தோழிகள் அதை பார்த்து பெருமையாக முத்து-மீனாவை பற்றி பேசி இருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அருண், மார்க்கெட்டில் காய் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த முத்து, அவரிடம் வம்பு வாங்கவே பேசுகிறார். அப்போது சோசியல் மீடியாவில் வீடியோ போட்ட விஷயத்தை முத்து சொன்னவுடன் அருண் பயங்கரமாக கோபப்படுகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைதடி அளவிற்கு சண்டை ஆகிறது.
இன்றைய எபிசோட்:
அப்போது அருண் எதிர்பாராத விதமாக அருண் கீழே விழ போகிறார். முத்து பிடிக்க போய் அவர் சட்டை பாக்கெட் கிழிந்து விடுகிறது. இதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து சிரித்ததால் அருணுக்கு கோபம் அதிகமானது. முத்துவின் மீது இருக்கும் பகை இன்னும் அதிகமாகிறது. அதன்பின் வீட்டில் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருக்கிறார். விஜயா டயட் இருப்பதாக சொல்லி யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகிறார். அதன் பின் பள்ளியில் பேரன்ஸ் மீட்டிங் இருப்பதால் அண்ணாமலை கிளம்புகிறார். உடனே முத்து-மீனா இருவரும் கிரிஸை பார்க்கலாம் என்று கிளம்புகிறார்கள். இது எல்லாம் கேட்ட ரோகினி ரொம்பவே பயப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பள்ளியில் கிறிஸ், அவருடைய பாட்டியையும் பார்த்து மீனா- முத்து இருவரும் பேசுகிறார்கள். ஆனால், கிரிஷ் பாட்டி ஏதோ காரணங்களை சொல்லி அங்கிருந்து சென்று விடுகிறார். இதனால் முத்து- மீனா ரொம்ப வருத்தப்படுகிறார்கள். அதற்குப்பின் வீடியோ கால் மூலம் பேரன்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவதற்காக ரோகிணி பயங்கரமாக கெட்டப் எல்லாம் போடுகிறார். அப்போது க்ரிஷ் அந்த பள்ளியில் தான் படிக்கிறார் என்ற உண்மை அண்ணாமலைக்கு தெரிய வருகிறது. அதற்குப்பின் வீடியோ கால் மூலம் ரோகினி டீச்சரிடம் பேசுகிறார். அதை அண்ணாமலை உன்னிப்பாக கவனிக்கிறார். மாட்டிக்கொள்வோமா என்று ரோகினி பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது