உண்மை தெரியாமல் ரவியை மோசமாக பேசும் ஸ்ருதி, கோபத்தில் கத்தும் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை பார்த்து கோகிலா, உங்கள் கணவர் முத்து ரொம்ப நல்லவர். உங்க அம்மாவின் கடை வருவதற்கு காரணம் முத்து தான். அருண், சிபாரிசு கடிதம் கொடுத்தார். ஆனால், என்னுடைய கணவர் ஒத்துக்கொள்ளவில்லை. பின் முத்து, அருண் செய்ததாக சொல்ல சொன்னார் என்றார். இதைக் கேட்ட சீதா, முத்துவிடம் கேள்வி கேட்டார். உடனே முத்து, யார் செய்தால் என்ன? அத்தை கடை வந்தால் போதும் என்று தன்னடக்கமாக பேசி இருந்தார்.
சீதா உண்மை அறிந்து அருனிடம் கடைவந்த விஷயத்தை பற்றி கேட்டார். அதற்கு அருண், நான் லெட்டர் கொடுத்து தான் வந்தது என்று நினைத்தேன். அந்த டிரைவர் முத்து சொல்லி தான் நடந்ததா? இதற்கு என்ன இப்ப? என்று ரொம்ப தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு சீதா, எதற்காக என்னிடம் உண்மை மறைத்தீர்கள்? என்றார். அதற்கு அருண், ரொம்ப மோசமாக முத்துவையும், மீனாவையும் பேசி இருந்தார். இதனால் சீதாவிற்கு கோபம் வந்து கையில் கிடைத்த பொருளை தூக்கி போட்டு உடைத்தார்.
சிறகடிக்க ஆசை:
உடனே அருண், எனக்கு பிடிக்காதவர்களுடன் நீ பேசக்கூடாது. எனக்கு அந்த முத்துவை பிடிக்காது என்று திட்டினார். இதனால் சீதா, கோபப்பட்டு வீட்டை விட்டு வந்து விட்டார். அதற்கு பின் வீட்டில் மீனா, அம்மா எல்லோரும் விசாரித்தார்கள். அதற்கு சீதா, நடந்ததை சொல்லி அருணே என்னை வந்து அழைத்து போகட்டும். நான் போகமாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் ஸ்ருதி அப்பா-அம்மா இருவரும் நீத்துவை பார்த்து ரொம்ப மோசமாக பேசி விடுவதால் நீத்து அழுதார். இதை பார்த்து ரவி விசாரிக்க, நீத்து உண்மையை சொல்லி விட்டார். பின் ரவி, ஸ்ருதி அப்பா-அம்மா மீது கோபப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நீத்து கிளம்பிய உடனே ரவி கிளம்பியதால் ஸ்ருதி பயங்கர கோபத்தில் இருக்கிறார். பின் ஸ்ருதி, ரெஸ்டாரண்ட் உனக்காக தான் ஆரம்பித்தேன். எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? உனக்கு நீத்து ரொம்ப முக்கியமானவளாக போயிட்டாளா? என்று பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ரவி உண்மையை சொல்லப் பார்க்கிறார். ஆனால், சுருதி கொஞ்சம் கூட கேட்கவில்லை மோசமாக ரவியை திட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் பார்வதியின் குரல் சரியில்லை என்று வசந்த் அவருக்கு சூப் வைத்து வீட்டுக்கு கொண்டு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் வசந்த்- பார்வதி இருவருமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்த விஜயா, இதெல்லாம் சரியில்லை. வயதுக்கு மீறி நீங்கள் செய்கிறீர்கள் என்றெல்லாம் திட்டுகிறார். வசந்த், நாங்கள் நண்பர்களாக தான் பழகுகிறோம். இதில் ஒன்றும் தப்பில்லை என்றெல்லாம் சொல்கிறார். இருந்தாலுமே விஜயா இருவரையும் திட்டி வார்னிங் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து சுருதியின் அப்பா, அம்மா வந்து வருகிறார்கள். அப்போது ஸ்ருதியின் அப்பா, ரவி, நீத்துவின் ரெஸ்டாரன்டை விட்டு ஸ்ருதியுடன் சேர்ந்து ரெஸ்டாரன்ட் நடத்த சொல்லுங்கள். நீங்கள் கொஞ்சம் அறிவுரை சொல்லி உங்கள் மகனை திருத்துங்கள் என்றெல்லாம் சொல்கிறார். பின் வீட்டில் மூன்று ஜோடிகளுமே தங்களுடைய தொழில்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது