பொங்கல் கொண்டாட்டம் : கோபத்தின் உச்சத்தில் பெண்கள், ஆண்கள் நிலை என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மலேசியாவில் இருந்து வந்தவர்களை முத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். உடனே விஜயா, என்னுடைய மூத்த மருமகளும் மலேசியா தான் என்று ரோகினியை அழைத்தார். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டே இருந்தார். எல்லோருமே ரோகினுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி, பல் வலி என்று வீங்கியது போல் டிராமா செய்து அங்கு இருந்து எஸ்கேப் ஆக பார்த்தார் . இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது.
பின் ரோகினி, ஸ்ருதியை கழட்டிவிட்டு எஸ்கேப்பாக பல முயற்சி செய்தார். ஆனால், ஸ்ருதி விடாமல் அவருடன் தான் இருந்தார். பின் ரோகினியை செக் பண்ணி பார்த்த டாக்டர், அவருக்கு சொத்தைப்பல் இருக்கிறது. பிடுங்கிவிட வேண்டும் என்று சொன்னவுடன் ரோகினி பயந்து விட்டார். ஸ்ருதி எதுவாக இருந்தாலும் செய்யுங்கள் என்று சொன்னார். ஒரு வழியாக பல்லை டாக்டரும் பிடுங்கி விட்டதால் ரோகினிக்கு உண்மையிலேயே பல்வலி அதிகமாகி வீக்கம் வந்துவிட்டது. இன்னொரு பக்கம் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் கிளம்பி விட்டார்கள். அதற்கு பின் தான் ரோகினியும் வீட்டிற்கு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
பின் ஹாஸ்பிடல் நடந்ததை ஸ்ருதி சொன்னவுடன் எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், ரோகினி தப்பித்து விட்டோம் என்று இருந்தார். நேற்று எபிசோடில் ரோகினி மொபைலுக்கு கால் வந்தது. அதை மனோஜ் எடுத்து பேச, அப்போது வாடகை கட்டவில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள் ரோகினி என்று திட்டி இருந்தார். மனோஜ்க்கு ஒண்ணுமே புரியவில்லை போனை வைத்து விட்டார். உடனே மனோஜ், இதைப் பற்றி ரோகினி இடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே கோபத்தில் மனோஜ், எதுவாக இருந்தாலும் ஏன் என்னிடம் மறைகிறாய்? நீ என்னிடம் உண்மையை சொல்ல மாட்டுகிறாய் என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கோபித்துக் கொண்டு மனோஜ் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்து, மீனா சொன்னதை மீறி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை அறிந்தவுடன் மீனா கோபப்பட்டு முத்துவிடம் சண்டை போட்டார். இதனால் முத்து மொட்டை மாடிக்கு சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதி போன் செய்தும் ரவி வேலையில் பிஸியாக இருந்ததால் எடுக்கவில்லை. ஏன் போன் எடுக்கவில்லை? என்று கோபத்தில் ஸ்ருதி ரவியிடம் சண்டை போட, ரவியுமே மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார்.
இன்றைய எபிசோட்:
மூன்று பேருமே மொட்டை மாடியில் திருமண வாழ்க்கை பற்றியும், பொண்டாட்டியால் நிம்மதி இல்லை என்றும் புலம்பி பேசிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று எபிசோட்டில் மூன்று ஜோடிகளுமே கோபத்தில் இருக்கிறார்கள். கணவன்மார்கள் யாருமே மனைவியிடம் பேசவில்லை. அவர்களுமே தங்களுடைய கணவர்களிடம் பேசாமல் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த மூன்று ஜோடிகளுக்கும் இடையே சண்டை இருக்கிறது என்று அண்ணாமலை தெரிந்து கொள்கிறார். ஆனால், அவர்களுடைய பஞ்சாயத்தை கேட்கவில்லை.
சீரியல் ட்ராக்:
விஜயாவும் அண்ணாமலை சொன்னதைப் போலவே அமைதியாக இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த பாட்டியை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், பாட்டி வந்த உடனேயே மூன்று ஜோடிக்குள் சண்டை இருப்பதை தெரிந்து கொள்கிறார். அந்த சமயம் பார்த்து ரவியின் ஓனர் வீட்டிற்கு வருகிறார். அவர், பொங்கல் கொண்டாட்டத்திற்கு போட்டிகள் நடக்கிறது. அதற்காக எல்லோரையும் இன்வைட் செய்கிறார். பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறார்கள். மூன்று ஜோடியுமே தனித்தனியாக நின்று கொண்டிருக்கிறார்கள். பின் போட்டியில் ரோகினி, மீனா, சுருதி மூவருமே கலந்து கொள்கிறார்கள். அதில் சுருதி ஆரம்பத்திலேயே அவுட்டாகி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.