மனோஜ் சொன்ன வார்த்தையால் கடுப்பான ஹரிணி, சிந்தாமணி எடுத்த முடிவு - சிறகடிக்க ஆசை

By subhashini · 18/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை சந்திக்க அவருடன் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய கோரிக்கையை மீனாவிடம் சொன்னார்கள். ஆனால், அவர்களை பேசவிடாமல் விஜயா மாற்றி மாற்றி மீனாவிற்கு வேலை வைத்தார். உடனே முத்து, விஜயா சொன்ன வேலைகள் எல்லாம் செய்தார். இதை பார்த்து மீனாவுடன் வேலை செய்பவர்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதற்குப்பின் சத்யா-ரேகா இருவரும் பைக்கில் வந்தார்கள். அதை சிந்தாமணி பார்த்து பின் தொடர்ந்து வந்தார்.

சத்யா- ரேகா இருவரும் மீனா, முத்திருக்கும் இடத்திற்கு வந்தார்கள். அவர்களை பின் தொடர்ந்து வந்த சிந்தாமணி ஷாக் ஆனார். கோபத்தில் சிந்தாமணி அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் மீனா, தலைவியானதால் கேக் வெட்டி செலபரேட் செய்தார்கள். அதற்குப்பின் ரேகா, தான் சிந்தாமணி மகள் என்ற உண்மையை சொல்லி விட்டார். இதனால் மீனா, நீங்கள் இருவரும் பேச வேண்டாம், காதலிக்க வேண்டாம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றெல்லாம் புலம்பினார். உடனே முத்து, பெரியவர்கள் செய்த தவறுக்கு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள்.

சிறகடிக்க ஆசை:

உங்கள் காதலுக்கு நான் சப்போர்ட் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் ஆட்டோவில் மனோஜ், ஹரிணி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஆட்டோவில் செல்வது செட் ஆகாதால் ஹரணிக்கு வாந்தி வந்து விட்டது. மனோஜ் கேரிங்காக ஹரிணியை பார்த்து கொண்டார். அதை பார்த்து ரோகிணிக்கு கோபம் வருகிறது. மனோஜ் இல்லாத நேரம் பார்த்து ஹரணியிடம் ரோகிணி பேசி இருந்தார். இன்னொரு பக்கம் சிந்தாமணி, சத்யா- ரேகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை பற்றி தன்னுடைய கணவரிடம் சொல்லி கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, அந்த சத்யா சரியில்லை.அவன் ஏற்கனவே திருட்டு வேலை செய்திருந்தவன். இப்போதுதான் அவன் வேலைக்கு வந்திருக்கிறான். அவன் குடும்பமே மோசமான குடும்பம் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விடுகிறார். ரேகாவின் அப்பாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி, ரேகாவை வேறு ஒரு இடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவள் வெளியே இருந்தால் காதலை மறந்து விடுவாள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சுருதியின் ஓட்டலுக்கு முத்து, மீனா, மனோஜ், ஹரிணி, ஸ்வேதா எல்லோருமே சென்று இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

ஹரணிக்கு, ஸ்ருதியின் ஹோட்டல் ரொம்பவே பிடித்து விடுகிறது, பாராட்டுகிறார். ஆனால், மனோஜ் வழக்கம்போல எல்லோரையும் கிண்டல் செய்கிறார். ஹரணிக்கு பிடிக்கவே இல்லை. அதற்குப்பின் ஹரிணி சாப்பிடுகிறார். மனோஜ் ஓவராக சீன் போட்டு கிண்டல் கேலி செய்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரிணி மனோஜை திட்டி விடுகிறார். அதற்குப்பின் ஹரிணி, ரோகினியின் பார்லருக்கு செல்கிறார். அங்கு ரோகினியின் மொபைலில் மனோஜ் போட்டோவை பார்த்த ஹரிணி விசாரிக்கிறார். அதற்கு ரோகிணி, இவர்தான் என்னுடைய கணவர் என்று சொல்கிறார். உடனே ஹரிணி, இவருடன் தான் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்று சொல்கிறார். ரோகிணி அழுது டிராமா போட்டு நடிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full