எலுமிச்சை பழம் வைத்து முத்து போட்ட மாஸ்டர் பிளான், பயத்தில் கதறும் மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். அதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிப்ட் வாங்க, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது.
பாட்டி பிறந்தநாள் என்பதால் முத்து அமைதியாக இருந்தார். பின் பாட்டி பிறந்தநாளை எல்லோரும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். பாட்டி, என்னுடைய மனதை குளிர வைத்தது முத்து-மீனா தான் என்று தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற பரம்பரை நகையை கொடுத்தார். அடுத்த நாள் பாட்டி ஊருக்கு சென்ற பின் முத்து தன்னிடம் இருந்த கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் சொன்னார். அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொன்னார்.
கவரிங் நகை ட்ராக்:
இதனால் கோபமடைந்த மீனா, நாங்கள் ஏழைகள் தான். ஆனால், இப்படி எல்லாம் செய்ய மாட்டோம் என்று வாதம் செய்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும். ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். அதற்குப் பிறகு சுருதியை வைத்து வேற குரலில் மனோஜ் இடம் பேச வைத்தார். ஆனால், உஷாரான மனோஜ் சமாளித்து தப்பித்து விடுகிறார். பின் முத்து, மீனா இருவரும் விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு உண்மையை கண்டுபிடிக்க சென்றார்கள். கடைசியில் உண்மை சொல்லும் வரும் நேரத்தில் விஜயா வந்து தடுத்து நிறுத்துகிறார்.
முத்து போட்ட குறும்படம்:
மேலும், செல்வம்- முத்து இருவரும் பிரிட்ஜ் வாங்க ஒரு கடைக்கு சென்றார்கள். ஆனால், அந்த கடையில் இருந்தவர்கள் மனோஜ் இடம் பிரிட்ஜை ஏமாற்றி வாங்கிய கும்பல் . இந்த கும்பல் செய்த திருட்டு வேலையை அறிந்த போலீசார் எல்லோரையும் கைது செய்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பிக்கிறார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படி பணம் வந்தது? என்று கேட்க, மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா.
முத்து போட்ட புது பிளான்:
பின் மனோஜை பயங்கரமாக திட்டுகிறார் ரோகினி. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் மீனாவின் நகையை அடகு வைத்து தான் அந்த பணத்தை கொடுத்தேன் என்று உண்மையை உளறி விடுகிறார். இன்னொரு பக்கம், முத்து விசாரிக்கிறார். எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து தில்லாலங்கடி வேலையை செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், முத்து ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்கிறார்.
மாட்டிக்கொள்ளும் விஜயா, மனோஜ்:
அந்த நகையை யார் மாற்றி வைத்தார்களோ அவர்களுக்கு வாய் கோணி விடும் என்று சாமி அறையில் அந்த பழத்தை வைக்கிறார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். பின் மனோஜ், விஜயா இருவரும் வாய் கோணி இருப்பது போல நினைத்துக் கொண்டு பயப்படுகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரோகினி சமாதானம் சொல்கிறார். பின் விஜயா ஒரு சாமியாரை சந்தித்து நடந்ததை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் நகையை மாற்றியது மனோஜ்-விஜயா என்ற உண்மை வெளிவருமா? முத்து என்ன செய்யப் போகிறார்? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது