உண்மையை உளறிய மனோஜ், வசமாக மாட்டிக்கொண்ட விஜயா, அண்ணாமலை எடுத்த முடிவு- சிறகடிக்க ஆசை

By subhashini · 18/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. சீரியலில் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விட்டார்.

இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிப்ட் வாங்க மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று இருந்தார். ஆனால், அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார். அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு மீனா பேசி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார்.

சிறகடிக்க ஆசை:

மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பித்தார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். ஆனால், மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் உண்மையை உளறி விடுகிறார். பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்லி, அந்த நகையை யார் மாற்றி வைத்தார்களோ அவர்களுக்கு வாய் கோணி விடும் என்று சாமி அறையில் வைக்கிறார்.

முத்து போட்ட புது பிளான்:

இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரோகினி சமாதானம் சொல்கிறார். இரவு முழுவதும் தூங்காமல் மனோஜ் சுற்றிக் கொண்டே இருக்கிறார். இருவரும் காலையில் ஒரு சாமியாரை சந்தித்து பேசுகிறார்கள். அவர் கண்டிப்பாக நடக்கும் என்று எலுமிச்சம் பழத்தை அதற்கு எதிர்வினையில் வையுங்கள் என்று சொன்னார். இவர்களும் அதே போல் அந்த எலுமிச்சம் பழத்தை சாமி அறையில் வைத்தார்கள். இருந்தாலுமே இரவில் தூங்க முடியாமல் மனோஜ் தவித்து கொண்டு இருந்தார். இதனால் விஜயா-மனோஜ் இருவரும் எலுமிச்சம்பழத்தை தூக்கி வெளியே போடலாம் என்று சாமியறைக்கு சென்றார்கள்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் எல்லோருமே வந்து விடுகிறார்கள். முத்து மீனா- மாத்தி மாத்தி கேள்வி கேட்கிறார்கள். இருந்தாலுமே சமாளித்து ஒரு கட்டத்தில் ரோகினி, மனோஜை ரூமுக்கு அழைத்து செல்ல பார்க்கிறார். ஆனால், முத்து தடுத்து நிறுத்தி உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், வழியில்லாமல் மனோஜ் உண்மையை உளறி விடுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, வெளு வெளு என்று மனோஜை வெளுக்கிறார். அதை விஜயா தடுக்கிறார். கடைசியில் இது எல்லாம் உனக்கும் தானே தெரியும் என்று கோபப்பட்டு அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று கோபப்பட்டு பேசுகிறார்.

இன்றைய எபிசோட்:

இதனால் விஜயா கதவை தாழ்ப்பாள் போட்டு கொள்கிறார். எல்லோருமே எவ்வளவு பேசியும் விஜயா வெளிவரவில்லை. அண்ணாமலை, இனி நான் அவளிடம் பேச மாட்டேன் என்று தூங்க செல்கிறார். மறுநாளே மனோஜ், மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு முடியாது என்று சொல்கிறார். விஜயாவும் தான் போட்டிருந்த நகையை கழட்டி மீனாவின் மேலே தூக்கி எறிகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் விஜயா தான் செய்த தவறை உணர்வாரா? அண்ணாமலை என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full