முத்து செய்த வேலையால் மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி, ரோகினிக்கு பாட்டி வைத்த ஆப்பு - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 25/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்து போனதால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இந்த உண்மை முத்து அறிந்து அண்ணாமலை இடம் சொன்னார். உடனே விஜயா, இல்லை என்று மீனா மீது பலி போட்டார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது.
அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பித்தார்.

இதை பார்த்தவுடன் எல்லோரும் அதிர்ச்சியாகி இருந்தார்கள். இருந்தாலும், விஜயா சமாளித்து விட்டார். எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழத்தை வைத்து தில்லாலங்கடி வேலையை செய்தார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். கடைசியில் விஜயா-மனோஜ் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுத்தார். பின் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி, அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார். பின் ரோகினி- மனோஜ் இருவருமே வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து 2 இலட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார்கள். மீதி பணம் சீக்கிரமாகவே தருகிறோம் என்று சொல்கிறார்கள்.

சீரியல் கதை:

பின் ஸ்ருதி, ரோகினியை கூப்பிட்டு விஜயாவிடம் பேசுகிறார். விஜயா, மீனாவை தான் தீட்டி இருந்தார். இது எல்லாம் பார்த்த ஸ்ருதி, மீனா தான் உங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவங்க தான் எங்களை உங்களிடம் பேச சொன்னார். நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். தப்பு செய்தது நீங்களும், மனோஜ் தான். அதற்கு நீங்கள் சாரி கேட்டாலே இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்கிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல பயங்கர கோபம் வருகிறது. நேற்று எபிசோடில், முத்து, செல்வம் 2 லட்சம் பணத்தை வைத்து கார் ஒன்று வாங்க போனார்கள். ஆனால், மீனா வீட்டில் பிரச்சனை இருக்கும்போது எதற்கு புது கார் வாங்க வேண்டும்? பிரச்சனை முடிந்த பின்பு வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவுடன் முத்துவும் சரி என்று ஒத்துக் கொள்கிறார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் விஜயா, பணக்கார பேய் ஸ்ருதி ரொம்ப ஓவராக பேசுகிறார். அவளை அடக்கி வைக்க என்ன செய்கிறேன் பார் என்று பார்வதியிடம் புலம்பிக் கொண்டிருந்தார். பின் வீட்டில் ஸ்ருதி, ரோகினி, மீனா மூவரும் பிரசவ வலி குறித்து பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் முத்து பாட்டியை வரவழைத்து விடுகிறார். பாட்டி வந்ததை பார்த்து விஜயா அதிர்ந்து போகிறார். பின் நடந்ததை பற்றி பாட்டி விஜயாவிடம் பேசுகிறார். அதற்கு பின் அண்ணாமலை இடம் பேசி இருவரையும் சமாதானம் செய்ய எல்லோரையும் அழைக்கிறார். அப்போது மனோஜை கூப்பிட்டு கன்னத்தில் அறைந்து திட்டுகிறார் பாட்டி.

இன்றைய எபிசோட்:

விஜயாவும், அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் தர வேண்டும். அவன் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். உடனே பாட்டியும், இது நல்ல யோசனை, கொடுத்து விடு என்று சொன்னதற்கு என்னால் முடியாது என்று மனோஜ் சொல்கிறார். பிறகு பாட்டி, அந்த பணத்தை வாங்கி தருவது உன்னுடைய பொறுப்பு விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா, மனோஜ் அந்த பணத்தை கொடுத்து விடு என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிவடைகிறது. நாளை எபிசோடில், ரோகினி உன் அப்பாவிடம் சொல்லி பணத்தை ஏற்பாடு செய் என்று விஜயா சொல்கிறார். அதற்கு மனோஜ் எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் அம்மா காரணம் என்று கோபப்படுகிறார். இனிவரும் நாட்களில் விஜயா- மனோஜ் இடையே சண்டை வருமா? மொத்த பணத்தையும் ரோகினி ஏற்பாடு செய்து தருவாரா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full