பாட்டி கொடுத்த டாஸ்க், ரோகினிக்கு விஜயா வைத்த ஆப்பு, புது சிக்கலில் சிக்கிய மனோஜ்-சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடித்தது. பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, தில்லாலங்கடி வேலையை செய்தார். மனோஜ், விஜயா இருவருமே பயந்து கடைசியில் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுத்தார்.
பின் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார். அதோடு மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். உடனே முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி, அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார்.
சிறகடிக்க ஆசை:
மேலும், ரோகினி- மனோஜ் இருவருமே வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து 2 இலட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார்கள். மீதி பணம் சீக்கிரமாகவே தருகிறோம் என்று சொல்கிறார்கள். பின் ஸ்ருதி, ரோகினியை கூப்பிட்டு விஜயாவிடம் பேசுகிறார். விஜயா, மீனாவை தான் தீட்டி இருந்தார். இது எல்லாம் பார்த்த ஸ்ருதி, விஜயாவை வெளுத்து வாங்குகிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல பயங்கர கோபம் வருகிறது. நேற்று எபிசோடில், முத்து, செல்வம் கார் ஒன்று வாங்க போனார்கள். ஆனால், மீனா வீட்டில் பிரச்சனை இருக்கும்போது எதற்கு புது கார் வாங்க வேண்டும்? பிரச்சனை முடிந்த பின்பு வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னவுடன் முத்துவும் சரி என்று ஒத்துக் கொள்கிறார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் விஜயா, பணக்கார பேய் ஸ்ருதி ரொம்ப ஓவராக பேசுகிறார். அவளை அடக்கி வைக்க என்ன செய்கிறேன் பார் என்று பார்வதியிடம் புலம்பி இருந்தார். பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து விடுகிறார். பாட்டி வந்ததை பார்த்து விஜயா அதிர்ந்து போகிறார். பின் நடந்ததை பற்றி பாட்டி விஜயாவிடம் பேசுகிறார். அதற்கு பின் அண்ணாமலை இடம் பேசி இருவரையும் சமாதானம் செய்ய எல்லோரையும் அழைக்கிறார். விஜயாவும், அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்.
இன்றைய எப்பிசோட்:
உடனே பாட்டியும், இது நல்ல யோசனை, கொடுத்து விடு என்று சொன்னதற்கு என்னால் முடியாது என்று மனோஜ் சொல்கிறார். பிறகு பாட்டி, அந்த பணத்தை வாங்கி தருவது உன்னுடைய பொறுப்பு விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா, மனோஜ் அந்த பணத்தை கொடுத்து விடு என்று சொல்கிறார். பின் ரூமில் விஜயா, மனோஜை திட்டுகிறார். உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்திற்கு ஏற்பாடு செய் என்று ரோகிணியிடம் சொல்கிறார். உடனே மனோஜ், இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான். நீங்கள் எதுக்கு முத்துவைப் பெற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டதற்கு ஷாக் ஆகி விஜயா, உன்னையே நான் பெற்றிருக்கக் கூடாது என்று பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் மீனா, எல்லோருக்குமே டீ வைத்து கொடுக்கிறார். உடனே பாட்டி அவரவர்கள் சமைத்து சாப்பிடட்டும். நீ செய்யாதே என்று சொல்லி உட்கார வைத்து விடுகிறார். பின் ஒவ்வொரு ஜோடியையும் சமைத்து சாப்பிடுகிறார்கள். அப்போது அண்ணாமலை, விஜயாவும் சேர்ந்து சமைக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது. நாளை எபிசோடில், மனோஜ் கடையில் யாரோ ஒருவர் லெட்டர் எழுதி வைத்திருக்கிறார். அதை பார்த்து ரோகினி- மனோஜ் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் அந்த கடிதத்தை எழுதி வைத்தது யார்? ரோகினி மொத்த பணத்தையும் ஏற்பாடு செய்து தருவாரா? புதிய பிரச்சனையில் மனோஜ் சிக்கிக் கொள்வாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.