பாட்டிக்காக முத்து கொடுத்த சப்ரைஸ், வாயடைத்து போன விஜயா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் சிறகடிக்க ஆசை ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.
உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிந்தது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். பின் விஜயாவும் மீனாவின் நகையை கொடுக்க, மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பாட்டிக்கு பரிசு கொடுக்க முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.
சிறக்கடிக்க ஆசை :
அண்ணாமலை, விஜயாவிடம் பேசி நகையை வாங்கி கொடுக்கிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தார். யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள். இது பற்றி தன் அப்பாவிடம் கேட்க முத்து நினைக்கிறார். பாட்டி, தன் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடட்டும் அதற்கு பின் கேட்கலாம் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார் மீனா. ஆனால், அது மனோஜ் வேலை தான் என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார்.
பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்:
வீட்டில் பாட்டியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று பாட்டி சொல்கிறார். ரோகினி பாட்டிக்கு மேக்கப் போட்டு விடுகிறார். பின் அண்ணாமலை வீட்டிற்கு இரண்டு ஐய்யர்களை கூட்டிட்டு வந்து கோயிலில் சாமிக்கு படைத்த புடவையை கொடுத்து சப்ரைஸ் கொடுக்கிறார். வீட்டில் முத்து வராததை நினைத்து மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் பாட்டியிடம் எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். ஆனால், முத்து இல்லாமல் மீனா தனியாக நிற்கிறார்.
சீரியல் ட்ராக்:
வீட்டிற்கு ஸ்ருதியின் அம்மா மீனா நகையை பார்த்து, இது கவரிங் தானே, உன் புருஷன் உனக்கு தங்கத்தில் ஒரு நகையை கூட வாங்கி வைக்கவில்லையா? என்று கிண்டலாக பேசுகிறார். பாட்டியும், அண்ணாமலையும் சுருதி அம்மாவை திட்டுகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மனோஜ் பாட்டிற்கு தங்க சயின் வாங்கிக் கொடுக்கிறார். அதே போல் ரோகினியும் தங்கத்தில் கிப்ட் வாங்கி கொடுக்கிறார். அவரை அடுத்து ஸ்ருதி செல்போன் வாங்கி கொடுக்கிறார். ஸ்ருதியின் அம்மா நகை வாங்கி கொடுக்கிறார். விஜயா, டிவி கொடுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
மீனாவின் அம்மா புடவை வாங்கி தந்திருக்கிறார். இப்படி எல்லோருமே ஒவ்வொரு பரிசை கொடுக்கிறார்கள். அதற்குப் பின் கேக் வெட்டலாம் என்று மனோஜ் சொல்ல பாட்டி, முத்து இல்லாமல் வெட்ட முடியாது என்று சொல்கிற. அப்போது முத்து வந்து நிற்கிறார். பின் அவர் தன் பாட்டிற்காக அவருடைய பள்ளி நண்பர்களை அழைத்து வந்திருக்கிறார். அதை பார்த்தவுடன் பாட்டி சந்தோசத்தில் அழுகிறார். பின் அவர்களுடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்கிறார். அதற்குப் பின் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். இத்துடன் சீரியல் நிறைவடைகிறது. இனி வரும் நாட்களில் பாட்டியின் மனதை சந்தோஷப்படுத்தியது யார்? பாட்டி கொடுக்கும் கிப்ட் என்ன? யார் அதை வாங்க இருக்கிறார்கள் போன்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.