முத்து-மீனாவை அவமானப்படுத்திய கிரிஷ் பாட்டி, தனக்கு தானே ஆப்பு வைத்த மனோஜ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 19/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தன்மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியுமே விஜயா நம்பவில்லை. அந்த சமயம் பார்த்து சீர்திருத்த பள்ளியில் இருந்து முத்துவை அழைத்துப் போக வந்தார்கள். அண்ணாமலை கெஞ்சி கேட்டுமே அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது விஜயா, அவனை அழைத்துப் போகட்டும் விடுங்கள் என்று சொல்வதால் முத்து உடைந்து போய்விட்டார். இதையெல்லாம் முத்து, மீனாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். மறுநாள் காலையில் பள்ளிக்கு அடிபட்ட அந்த சிறுவனின் அப்பா கிரிஷிடம் கேள்வி கேட்க வந்தார்.

நேற்று எபிசோட்டில் கிரிஷிக்கு அந்த சிறுவனின் அப்பா சில டெஸ்ட் வைத்தார். அதில் கிரிஷுமே வெற்றி பெற்று விட்டார். அந்த சிறுவன் அப்பா, கிரிஷ் தெரியாமல் தான் தவறு செய்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். கிரிஷை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்த மாட்டேன் மன்னித்துவிடுகிறேன் என்றார். இதனால் முத்து-மீனா இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அந்த சிறுவனும் கிரிஷும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள். பின் ஸ்கூளில் நடந்ததை முத்து, அண்ணாமலையிடம் போன் பண்ணி சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

இதை எல்லாம் கேட்ட விஜயா வழக்கம் போல முத்துவை திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஸ்கூளில் நடந்ததை மகேஸ்வரி, ரோகினி இடம் சொன்னார். அதற்கு வித்யா, முத்து- மீனாவிடமே கிரிஷ் வளரட்டும் என்றார். இதனால் கோபப்பட்டு ரோகினி, வித்யாவை திட்டினார். அதற்கு பின் ரோகினி, தன் அம்மாவிடம் புது ட்ராமாவை போட்டார். இன்னொரு பக்கம் ராணி, மனோஜின் ஷோரூமுக்கு வந்து நல்லவள் போல பேசி இருந்தார். மனோஜூம் ராணியை தன் வலையில் சிக்க வைப்பதாக நினைத்து அவள் சொல்வதற்கெல்லாம் சரி என்றார். கடைசியில் ராணி வலையில் மனோஜ் வசமாக மாட்டி கொண்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ், ராணியிடம் அன்பாக பேசியது எல்லாம் வீடியோ எடுத்து விடுகிறார். அப்போது வந்த ராஜா, உண்மையிலேயே எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீ என் மனைவியிடம் அன்பாக பேசியது ஆதாரமாக இருக்கிறது. இதை வைத்து உன்னை என்ன செய்யப் போகிறேன் பார் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி நிற்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, கிரிஷ் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பாமல் தானே தடுத்து நிறுத்தியது போல தன்னுடைய யோகா கிளாஸில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து கடுப்பான மீனா, ஆமாம் என்னுடைய அத்தை தான் கிரிஷை காப்பாற்றினார். ஆனால், சில பேர் தன்னுடைய சொந்த பிள்ளையை கூட நம்பாமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் என்று விஜயா செய்த வேலையை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார். பின் மீனாவை தனியாக அழைத்து சென்று திட்டி அனுப்பி விடுகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் போட்டுக் கொடுக்கிறார். பின் கிரிசை அழைத்து செல்வதற்கு அவருடைய பாட்டி லட்சுமி, மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். இதை அறிந்து சென்ற முத்து-மீனாவை லட்சுமி திட்டி விடுகிறார். கடைசியில் லட்சுமி, கிரிஷை அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட மீனா ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full