ரோகினியை பிளாக்மெயில் செய்யும் கிரிஷ், ஸ்கூலில் முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 8/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, கிரிஷ் பார்த்த மாதிரி இருக்கிறது என்று உண்மை தெரிந்து கொள்வதற்காகத்தான் மீனாவிடம் போன் செய்தார். மீனா, முத்துவிடம் கிரிஷ் இல்லை என்று தெரிந்தவுடன் ரோகினி வருத்தப்பட்டார். அதற்குப்பின் கிரிஷை கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே மீனாவின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். அப்போது முத்து, கார் டிக்கியை திறக்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்து ஷாக் ஆனார். பின் கிரிஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி இருந்தார்.

கிரிஷ், கண் விழித்து இது உங்களுடைய கார் என்று எனக்கு தெரியாது. ஸ்கூலில் என்னை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டினார்கள் என நடந்ததை சொன்னார். பின் முத்து, பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு கிரிஷ் உடைய அம்மா இவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு எங்கேயே சென்று விட்டார் என்றார். அதற்கு அப்புறம் மீனா வீட்டில் எல்லோரும் க்ரிஷ் அம்மா பற்றி விசாரித்தார்கள். ஆனால், கிரிஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

கிரிஷ் நிலைமையை புரிந்து கொண்டு முத்து- மீனா இருவருமே ஸ்கூலுக்கு சென்று இருந்தார்கள். அப்போது ஸ்கூலில் இருந்த ரோகினி, முத்துவை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டார். பின் ஸ்கூலில் முத்து, கிரிஷ் காணாமல் போய் கிடைத்த விஷயத்தை பற்றி சொன்னவுடன் ஆசிரியரும் சந்தோஷப்பட்டு அவருடைய கார்டியனிடம் சொன்னார். பின் மகேஸ்வரி, கிரிஷ் எங்கே? என்று கேட்டதற்கு முத்து, அவன் பயந்து போயிட்டான். வீட்டில் இருக்கிறான். கிரிஷ் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு மகேஸ்வரி, அவர் வேலையாக இருக்கிறார். கிரிஷை கொண்டுவந்து ஸ்கூலில் விடுங்கள் என்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்கு முத்து, அவன் கொஞ்சம் பயம் தெளிந்த பின்பு கொண்டு வந்து விடுகிறேன் என்றார். இதையெல்லாம் அறிந்த ரோகினி வீட்டில் கிரிஷ் தன்னுடைய தோழியின் தோழி மகன் என்று ஒரு புது கதையை கிளப்பி விட்டார். அப்போது முத்து, பையன் மீது அக்கறை இல்லாத அவரிடம் கிரிசை விட முடியாது. கிரிஷை பள்ளிக்கூடத்தில் விடனும் என்றால் அவர் அம்மாவை பார்த்து தீரனும். அதற்குப் பிறகுதான் அவனை ஸ்கூலில் விட முடியும் என்றார். இதையெல்லாம் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயந்து போனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா கிரிஷை நன்றாக கவனித்துக் கொள்கிறார். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து- மீனா இருவருமே ஸ்கூலுக்கு போகிறார்கள். அங்கு கிரிஷ், மீனா ரொம்ப பயந்திருக்கிறார். அவன் எங்களுடனே இருக்கட்டும். அவர்களுடைய பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்கிறார். உடனே அந்த ஆசிரியர், மகேஸ்வரிக்கு போன் செய்து மீனா சொன்ன விஷயத்தை சொல்கிறார். பின் ரோகினி, கிரிஷிடம் பேசுகிறார். அப்போது ரோகினி, நீ மகேஸ்வரி வீட்டுக்கு போ. மீனா வீட்டிற்கு போகாதே என்று சொல்கிறார். கோபத்தில் கிரிஷ், மீனா ஆண்டி வீட்டுக்கு தான் போவேன். நீயா வந்து என்னை அழைக்கும் வரை நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன் என்று அங்கிருந்து ஓடி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ரெஸ்டாரண்ட் திறந்து வைப்பதற்கு சினிமா பிரபலத்திடம் கேட்கிறார். ஆனால், அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதால் சுருதி அமைதியாக வந்து விடுகிறார். அதற்குப் பின் வீட்டில் சீதா- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதா, எனக்கு தெரிந்த டாக்டரிடம் கிரிஷை கவுன்சிலிங்க்கு கூட்டிட்டு போகலாம். அவனுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார். கடைசியில் வீட்டில் சுருதி ரெஸ்டாரன்ட் திறப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full