மகனுக்கான துணி வாங்கும் ரோகினி, உண்மையை அறியும் விஜயா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By Rajkumar · 28/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடித்தது. பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, தில்லாலங்கடி வேலையை செய்தார். மனோஜ், விஜயா இருவருமே பயந்து கடைசியில் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுத்தார்.

பின் அண்ணாமலை, விஜயாவிடம் பேசாமல் இருக்கிறார். இதனால் மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். பின் முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி, அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார். கடைசியில் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து 2 இலட்சம் ரூபாயை முத்துவிடம் ரோகினி கொடுத்தார்.

சிறகடிக்க ஆசை:

வழக்கம் போல் இந்த பிரச்சனைக்கு விஜயா, மீனாவை தான் தீட்டி இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி, விஜயாவை வெளுத்து வாங்குகிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் விஜயா, பணக்கார பேய் ஸ்ருதி ரொம்ப ஓவராக பேசுகிறார். அவளை அடக்கி வைக்க என்ன செய்கிறேன் பார் என்று பார்வதியிடம் புலம்பி இருந்தார். பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்தார். பாட்டி வந்ததை பார்த்து விஜயா அதிர்ந்து போகிறார். பின் நடந்ததை பற்றி பாட்டி விஜயா, அண்ணாமலை இடம் பேசி இருவரையும் சமாதானம் செய்கிறார். விஜயாவும், அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் கதை:

கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். உடனே பாட்டியும், இது நல்ல யோசனை, கொடுத்து விடு என்று சொன்னதற்கு என்னால் முடியாது என்று மனோஜ் சொல்கிறார். பிறகு பாட்டி, அந்த பணத்தை வாங்கி தருவது உன்னுடைய பொறுப்பு விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா ஒத்து கொள்கிறார் . பின் ரூமில் விஜயா, மனோஜை திட்டுகிறார். பின் உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்திற்கு ஏற்பாடு செய் என்று ரோகிணியிடம் சொன்னார். மறுநாள் காலையில் பாட்டி, ஒவ்வொரு ஜோடியையும் சமைத்து சாப்பிட சொல்கிறார்.

நேற்று எபிசோட்:

எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். நேற்றைய எபிசோட்டில், முத்து புது காரை வாங்கி வந்தார். அந்த காரை வீட்டில் காண்பிக்க எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். வழக்கம் போல விஜயா, கிண்டலித்து இருந்தார். பின் விஜயா, அண்ணாமலையை காரில் ஏற்றி கோயிலுக்கு அழைத்து சென்று இருந்தார் முத்து. எப்படியாவது அப்பா, அம்மாவை பேச வைக்க வேண்டும் என்று முத்து நினைக்கிறார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். இதை பார்த்து மனோஜ் பயந்து சுற்றி தேடிக் கொண்டிருந்தார். ஆனால் ரோகினி, இது பிராங்க் ஆக கூட இருக்கும், இதை பற்றி கவலைப்படாதே என்று சொல்லி சமாதானம் செய்தார்.

https://www.youtube.com/watch?v=UxOcQj4RPWk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ரோகினி தன்னுடைய மகனுக்காக துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு செல்கிறார். அந்த சமயம் பார்த்து விஜயாவும் பரதநாட்டிய வகுப்பிற்காக துணி எடுக்க அந்த கடைக்கு வருகிறார். எதார்த்தமாக ரோகினியை சந்தித்து பேசுகிறார். அப்போது கடைக்காரர், உங்களுடைய மகனின் துணிக்கு பில் போட்டாச்சு, வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் விஜயா அதிர்ச்சியாகி உனக்கு மகனா? என்று கேட்கிறார். ரோகினி எதுவுமே பேச முடியாமல் நிற்கிறார். இனிவரும் நாட்களில் ரோகினியின் உண்மை முகம் வெளியே வருமா? இந்த பிரச்சினையை ரோகினி சமாளிப்பாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

behindtalkies AMP · Quick view
View full