விஜயா கையால் தண்ணீர் கூட வாங்கி குடிக்காத அண்ணாமலை, விஜயா எடுத்த முடிவு - சிறகடிக்க ஆசை

By subhashini · 21/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் மீனாவின் நகையை அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார் மனோஜ். இன்னொரு பக்கம் வீட்டில் பாட்டிக்கு கிபிட் வாங்க முத்து, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று பார்த்தால் அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார்.

அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும். அவருடைய தம்பி தான் இந்த வேலையை செய்திருப்பான் என்று சொல்ல கோபப்பட்டு மீனா பேசி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பித்தார்.

சிறகடிக்க ஆசை:

இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள். ஆனால், மனோஜை அடித்து அந்த நேரத்தில் காப்பாற்றி விடுகிறார் விஜயா. கடைசியில் மனோஜ், ரோகினி இடம் உண்மையை உளறி விடுகிறார். பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்லி சாமி அறையில் வைத்தார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். கடைசியில் விஜயா-மனோஜ் மாட்டி கொண்டார்கள்.

உண்மை அறிந்த அண்ணாமலை:

முத்து, மீனா மாத்தி மாத்தி கேள்வி கேட்க மனோஜ் உண்மையை உளறி விடுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுக்கிறார். கடைசியில் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார். கோபத்தில் விஜயா கதவை மூடி கொண்டு வெளிவரவில்லை. எல்லோருமே கதவை தட்டியும் விஜயா வரவில்லை. பின் விஜயாவின் தோழி பார்வதி வந்து விஜயாவை வெளியே கூட்டி வந்து விடுகிறார். பின் மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். பின் விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார்.

அண்ணாமலை எடுத்த முடிவு:

இதைப் பார்த்து அண்ணாமலை- முத்து இருவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். எதுவும் பேசாமல் மீனா அழுது கொண்டு இருந்தார். கடைசியில் முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை இரும்பிக் கொண்டிருக்கிறார். விஜயா தண்ணி கொண்டு வந்து கொடுத்தும் அதை வாங்கிக் கொள்ளவில்லை. பின் விஜயா இருக்கும் இடத்திற்கு அண்ணாமலை போகவில்லை.

https://www.youtube.com/watch?v=gmRiAZhH8Ss

சீரியல் ப்ரோமோ:

இதனால் விஜயா ரூமை விட்டுக்கொடுத்து நான் வெளியே தூங்கிக் கொள்கிறேன் என்றார். எல்லோருமே விஜயாவிடம் அண்ணாமலை இடம் பேச சொல்லி கேட்கிறார்கள். ஆனால், விஜயா வழக்கம்போல மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் விஜயா- அண்ணாமலை இடையே இருக்கும் விரிசல் அதிகமாகுமா? அண்ணாமலை, விஜயாவிடம் பேசுவாரா? முத்து -மீனா என்ன செய்யப் போகிறார்கள்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Tamil Behind Talkies AMP · Quick view
View full