கிரிஷை வைத்து மிரட்டும் மேனேஜர், மீனா சொன்ன வார்த்தையால் பதறிய ரோகினி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, நான் எதுவும் சொல்லவில்லை என்றார். இது கல்யாணி ஆவி செய்த வேலை தான் என்று புரிந்து கொண்ட மனோஜ், அவனுக்கு யாரும் இல்லை. அதனால் அவன் எங்களை அப்பா அம்மா என்று அழைக்கிறார். கூப்பிட்டு கொள்ளட்டும் என்றார். உடனே விஜயா, அதெல்லாம் முடியாது என்று மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்.அதற்கு பின் மீனா, ரோகிணி இருவரும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். மீனா, சீக்கிரமாக வீட்டில் உண்மையை சொல். உன் வாழ்க்கையில் நடந்த சில தவறுக்காக தான் நானும் அமைதியாக இருக்கிறேன். உண்மையை சொல்லாமல் எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவாய்? என்று திட்டினார்.
மீனா, உன் உடம்பில் கல்யாணி ஆவி வந்திருக்கிறது என்று எத்தனை நாளுக்கு நடிக்கப் போகிறாய். சீக்கிரத்தில் உண்மையை சொல்லு என்றார். இதனால் ரோகிணி பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மனோஜை, பார்வதி வீட்டிற்கு வரவைத்த விஜயா, கிரிஷ் வீட்டை விட்டு அனுப்பு. நீ ஏன் அவனுக்கு அப்பாவாக ஒத்துக் கொண்டாய்? என்றெல்லாம் கேட்டார். மனோஜ், அதற்கு காரணம் இருக்கிறது. உண்மையை சொல்ல முடியாது என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் சிவன்- பார்வதி இருவரும் சேர்ந்து தங்களுடைய சேனலில் டெவலப் செய்வதற்காக ஊட்டிக்கு செல்ல திட்டம் போட்டு இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
இதை கேட்டு விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் வீட்டில் க்ரிஷ், தன்னுடைய மார்க் சீட்டை மனோஜிடம் காண்பித்து கையெழுத்து போட சொன்னார். மனோஜ், நான் எதற்கு போடணும் என்றார். இதை கேட்ட விஜயா கோபப்பட்டு கிரிஷை திட்டி ஒழுங்கு மரியாதையாக இருந்துகொள் இல்லை என்றால் அவ்வளவுதான் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். மீனா,முத்து, அண்ணாமலை எல்லோருமே சப்போர்ட் செய்தும் விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின்னர் ரூமில் ரோகினி பேய் வந்தது போல நடிப்பதால் மனோஜ் பயந்து கொண்டு ஓடி வந்து மார்க் கார்டில் கையெழுத்து போட்டு விட்டார். இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு சந்தேகம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி-மனோஜ் இருவரும் கிரிஷை அழைத்து வருவதற்கு செல்கிறார்கள். இன்னொரு பக்கம் மேனேஜர், நான் உன் அம்மாவுடைய நண்பர், உன்னை அழைத்திட்டு வர சொன்னார் என்று ரோகினி புகைப்படத்தை காண்பிக்கிறார். இதை நம்பி கிரிஷ், மேனேஜருடன் சென்று விடுகிறார். அதற்குப்பின் பள்ளி சென்று ரோகிணி பார்க்கிறார். ஆனால், கிரிஷ் அங்கு இல்லை. இதை வீட்டில் எல்லோரிடமும் மனோஜ், ரோகிணி சொல்கிறார்கள். முத்து-மீனா இருவரும் பதறுகிறார்கள். வழக்கம் போல விஜயா, அவன் போய் தொலையட்டும். எல்லோரும் வேலையை பாருங்கள் என்று திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து கிரிஷை தேட சொல்கிறார். அதற்கு பின் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. ரூமிற்கு சென்று ரோகினி பேசினார். அப்போது மேனேஜர், கிரிசை தேடி அலைகிறாயா? உன் மகனை நான் தான் கடத்திருக்கிறேன். 2 லட்சம் பணம் தந்தால்தான் விடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விடுகிறார். அதற்குப்பின் மீனா, இது சிந்தாமணி வேலையாக இருக்குமா? என்று சொல்கிறார். உடனே விஜயா, அதெல்லாம் கிடையாது. நான் எதுவும் சொல்லவில்லை என்கிறார். அதற்குப்பின் மீனா, போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார். ரோகினி, அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.