மலேசியா மணியின் ரகசியத்தை அறிந்த முத்து, ரோகினி நிலைமை என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் கல்யாண மண்டபத்தில் இரண்டு குடிகாரன்கள் குடித்துவிட்டு முத்துவின் மீது மோதி இருந்தார்கள். இதனால் முத்து மீது சரக்கு மொத்தம் கொட்டி விட்டது. பின் எல்லோருமே முத்து, தான் குடித்து இருக்கிறான் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதை பார்த்த மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். உடனே விஜயா ருத்ரதாண்டவம் ஆடினார். பின் மீனாவிடம் அவர், அவன் செய்த வேலையை பார்த்தாயா? எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று வழக்கம்போல முத்துவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.
இதனால் கொந்தளித்த மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். நீங்கள் திருந்தவே இல்லையா? என்று கத்தினார். முத்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க பார்த்தார். ஆனால், அதை மீனா-ரவி கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து சட்டையை மாற்றி இப்போது செக் பண்ணி பாருங்கள் என்றவுடன் வாசனை எதுவும் வரவில்லை. பின் தான் செய்த தவறை உணர்ந்து மீனா மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த குடிகாரர்களையும் காண்பித்த முத்து, இவர்கள் தான் இந்த வேலையை செய்தார்கள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
பவானி திருமணத்தில் இரண்டு திருடர்கள் நகை, பணத்தை திருடுவதற்காக சொந்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு சொந்தக்காரர்கள் போர் வேஷம் போட்டு வந்தார்கள். ஆனால், மீனாவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. இன்னொரு பக்கம் முத்து குடிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மீனா, இதை உன் அண்ணன் தான் சொன்னார். கோபத்தில் முத்து, மனோஜ் போனை பிடுங்கி வைத்து மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்றார். அதற்கு பின் நல்லபடியாக பவானி திருமணம் முடிந்தது. ஆனால், அந்த திருடர்கள் இரண்டு பேருமே பவானியின் நகையை எடுத்துக்கொண்டு கிளம்ப பார்த்தார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
இதை பார்த்தவுடன் சந்தேகம் வந்த மீனா, முத்துவிடம் சொல்ல, இரண்டு பேருமே அவர்களை வளைத்து பிடித்து பிடித்தார்கள். பின் அந்த திருடனை முத்து வெளுத்து வாங்கி இருந்தார். அப்போது அந்த திருடன் மீனாவின் கையை அறுத்துவிட்டு தப்பித்து விட்டார். பின் பவானியின் அப்பா வந்தவுடன் நடந்ததை சொல்ல, அவர் பணம் போனால் போகட்டும். உங்களுக்கு எதுவும் இல்லையா? என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். பின் இதை வீட்டில் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் திருமண வேலையை பாருங்கள் என்று முத்து சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலேசியா மணி இடம் பவானியின் அப்பா, திருடர்கள் நகையை திருட பார்த்தார்கள். என் நண்பனின் குடும்பம் தான் காப்பாற்றியது என்று ரொம்ப பெருமையாக பேச அவர்களுக்கு மரியாதை செலுத்த மாலையுடன் மலேசியா மணி வருகிறார். அவரை பார்த்தவுடன் முத்து-மீனா இருவரும் ஷாக்காகிறார்கள். மலேசியா மணிக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது முத்து- மீனா ரோகினி மாமாவைப் பற்றி பேசுகிறார். உடனே அவரை உள்ளே வரவைக்கிறார்கள். ரோகினிக்கு பேரதிர்ச்சி. என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். விஜயா, மனோஜ் இருவரும் உண்மை என்னவென்று புரியாமல் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே முத்து, இவர் மலேசியா மாமா கிடையாது. பவானி கணவனின் தாய் மாமன் என்று அவருடைய பற்றி எல்லா உண்மையும் சொல்ல, வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.