மர்ம முடிச்சுகள் அவிழும் தருணம், மலேசியா மாமாவால் பிரச்சனையில் சிக்கிய ரோகினி, விஜயா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திருமணத்தில் மாமியார், மருமகள்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்தவுடன் முத்துக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் முத்து தன்னுடைய அப்பா, சகோதரர்களிடம் அதை சொல்லி காண்பித்தார். எல்லோருமே சந்தோஷப்பட்டு சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் மாத்தி ஊற்றிக் கொண்டார்கள். அதை போட்டோவும் எடுத்தார்கள். பின் சமையல் செய்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மலேசியா மாமாவே இறங்கி சமையல் செய்தார். அந்த இடத்திற்கு முத்து தன்னுடைய அப்பாவிற்கு சூடு தண்ணீர் வாங்க வந்தார்.
கல்யாண மண்டபத்தில் இரண்டு குடிகாரன்கள் குடித்துவிட்டு முத்துவின் மீது மோதி இருந்தார்கள். இதனால் முத்து மீது சரக்கு மொத்தம் கொட்டி விட்டது. பின் எல்லோருமே முத்து, தான் குடித்து இருக்கிறான் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதை பார்த்த மனோஜ், தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி இருந்தார். உடனே விஜயா ருத்ரதாண்டவம் ஆடினார். பின் மீனாவிடம் அவர், அவன் செய்த வேலையை பார்த்தாயா? எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று வழக்கம்போல முத்துவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் கொந்தளித்த மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். நீங்கள் திருந்தவே இல்லையா? என்று கத்தினார். முத்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க பார்த்தார். ஆனால், அதை மீனா-ரவி கேட்கவில்லை. அதற்குப்பின் முத்து சட்டையை மாற்றி இப்போது செக் பண்ணி பாருங்கள் என்றவுடன் வாசனை எதுவும் வரவில்லை. பின் தான் செய்த தவறை உணர்ந்து மீனா மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த குடிகாரர்களையும் காண்பித்த முத்து, இவர்கள் தான் இந்த வேலையை செய்தார்கள் என்றார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பவானி திருமணத்தில் இரண்டு திருடர்கள் நகை, பணத்தை திருடுவதற்காக சொந்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு சொந்தக்காரர்கள் போர் வேஷம் போட்டு வந்தார்கள். ஆனால், மீனாவிற்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. இன்னொரு பக்கம் முத்து குடிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மீனா, இதை உன் அண்ணன் தான் சொன்னார். கோபத்தில் முத்து, மனோஜ் போனை பிடுங்கி வைத்து மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்றார். அதற்கு பின் நல்லபடியாக பவானி திருமணம் முடிந்தது. ஆனால், அந்த திருடர்கள் இரண்டு பேருமே பவானியின் நகையை எடுத்துக்கொண்டு கிளம்ப பார்த்தார்கள்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்தவுடன் சந்தேகம் வந்த மீனா, முத்துவிடம் சொல்ல, இரண்டு பேருமே அவர்களை வளைத்து பிடித்து பிடித்தார்கள். பின் அந்த திருடனை முத்து வெளுத்து வாங்கி இருந்தார். அப்போது அந்த திருடன் மீனாவின் கையை அறுத்துவிட்டு தப்பித்து விட்டார். பின் பவானியின் அப்பா வந்தவுடன் நடந்ததை சொல்ல, அவர் பணம் போனால் போகட்டும். உங்களுக்கு எதுவும் இல்லையா? என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். பின் இதை வீட்டில் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் திருமண வேலையை பாருங்கள் என்று முத்து சொன்னார்.
https://www.youtube.com/watch?v=M5sPLXEar08
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்துவின் வீட்டிற்கு மலேசியா மாமா மணி வருகிறார். அவரைப் பார்த்தவுடன் ரோகினி அதிர்ச்சி ஆகிறார். பின் மலேசியா மாமா மணி, ரோகினி பற்றியும், நடந்த உண்மையைப் பற்றியும் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். கோபத்தில் கொந்தளித்த விஜயா, ரோகினியை அடித்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.