பணத்திற்கு ஆசைப்பட்டு மனோஜ் எடுத்த முடிவு, ஒத்துக்கொள்வாரா விஜயா ? சிறகடிக்க ஆசை

பணத்திற்கு ஆசைப்பட்டு மனோஜ் எடுத்த முடிவு, ஒத்துக்கொள்வாரா விஜயா ?

By subhashini · 29/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகா இருவருக்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேசி இருந்தார்கள். விஜயா, சீக்கிரமாகவே திருமணம் ஏற்பாடு செய். அந்த சிந்தாமணி முகத்தில் கறியை பூச வேண்டும் என்றார். பின் தாம்பூல தட்டோடு சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று ரேகா-சத்யா திருமணத்தை பற்றி முத்து-மீனா பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணத்தை நடத்துகிறாய்? என்று சவால் விட்டார். முத்து, கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும் என்று பதிலுக்கு சவால் விட்டு வந்தார்.

சத்யா, ரேகாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் முத்து-மீனா செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிந்தாமணியும் அவருடைய கணவரும் திருமணத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் உதவி கேட்டிருந்தார்கள். அதற்குப் பின் மனோஜ், கனகாவின் அம்மா சொன்ன ப்ரோபசல் பற்றி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தார். அப்போது வந்த ஜோதிடர், இது உங்களுக்கு நல்ல வாய்ப்பு. அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மனோஜ் கடைக்கு வந்த ரோகிணி, நீ என்னிடம் எப்போதும் வரப்போவதில்லை. நீ உன்னுடைய அம்மாவை பற்றி யோசிக்கிறாய். நான் என் மகனைப் பற்றி யோசிக்க விரும்புகிறேன். ஐந்து லட்சம் பணத்தை கொடுத்துவிடு. நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன் என்றார். இதைக்கேட்டு மனோஜிக்கு கஷ்டமாக இருக்கிறது. பின் வீட்டிற்கு சென்ற மனோஜ், ரோகினி உடன் இருந்த நினைவுகளை எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார். ரோகினிக்கு விவாகரத்து கொடுப்பதா? கனகாவை திருமணம் செய்து கொள்வதா? என்று புரியாமல் குழம்பி போய் இருந்தார் மனோஜ்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, சத்யா-ரேகாவின் திருமணத்தை நடத்துவதை பற்றி அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார். யாரையெல்லாம் அழைக்கலாம் என்று முத்து, அண்ணாமலை இருவரும் டிஸ்கஸ் செய்கிறார்கள். அப்போது விஜயா, நானும் வருகிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு முத்துவிற்கு ஷாக் ஆக இருக்கிறது. ஆனால், விஜயா இந்த கல்யாணத்தில் கலந்து கொள்வதற்கு காரணம் சிந்தாமணியை பழிவாங்கத்தான். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ், விஜயாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் கனகாவை பற்றி சொல்கிறார். எல்லோருமே சொத்துக்காக தான் மனோஜ் திருமணம் செய்து கொள்கிறார் என்று புரிந்து கொள்கிறார்கள்.

கோவப்பட்ட விஜயா, இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி விடுகிறார். மனோஜ் எவ்வளவு சொல்லியுமே விஜயா கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சீதா, சந்திரா இருவரும் முத்துவின் பாட்டி வீட்டுக்கு வருகிறார்கள். சீதா தன்னுடைய கணவரிடம் பொய் சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறார். சீதாவின் மீது இருந்த சந்தேகத்தால் அருண் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அருண்- சீதா இடையே நடக்கும் சண்டையை முத்துவின் பாட்டி தெரிந்து கொள்கிறார். பின் சீதாவிடம் பாட்டி, யாருக்காகவும் அமைதியாகவும் அடங்கியும் போகக்கூடாது என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். அதற்குப்பின் விஜயா, பார்வதி சந்திக்கப் போகிறார். அங்கு ரோகிணி இருப்பதை பார்த்தவுடன் விஜயா வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அப்போது ரோகினி, நான் மனோஜ்க்கு விவகாரத்து கொடுத்து விடுகிறேன். உங்களை ஏமாற்றியதற்க்கும் பொய் சொல்லியதற்கும் சாரி என்றெல்லாம் பல நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full